பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் சிந்தனை அமர்வு கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்

Posted On: 05 JUL 2023 5:20PM by PIB Chennai

புதுதில்லியில் 2023 ஜூலை 06 அன்று  நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருநாள் சிந்தனை அமர்வு கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கவுள்ளார்.

கடந்த மாதம், பாதுகாப்புத் துறை, பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை, ராணுவ விவகாரத் துறை, முன்னாள் ராணுவத்தினர் நலத் துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவனம் ஆகியவை கடந்த மாதம் தனித்தனியே அமர்வுகளை நடத்தி முக்கிய விவகாரங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விவாதித்தது.

இந்த அமர்வின் போது முடிவு செய்யப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட், முப்படை தளபதி ஜென்ரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஒருநாள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

***

AD/IR/AG/KRS


(Release ID: 1937615) Visitor Counter : 141