கலாசாரத்துறை அமைச்சகம்

மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் சர்வதேச புத்தக் கூட்டமைப்பு ஆஷாத பூர்ணிமாவை நாளை தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டாடவுள்ளது

Posted On: 02 JUL 2023 2:50PM by PIB Chennai

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சர்வதேச புத்தக் கூட்டமைப்பு, 2023-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி ஆஷாத பூர்ணிமாவை புதுதில்லி ஜன்பத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டாடவுள்ளது. இது சர்வதேச புத்தக் கூட்டமைப்பு கொண்டாடும் முதன்மை நிகழ்வு ஆகும். மேலும், புத்தப் பூர்ணிமாவுக்கு அடுத்ததாக புத்தர்களுக்கு இரண்டாவது புனிதமான நாள் இதுவாகும்.

 

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி வாயிலாக உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சர்வதேச புத்தக் கூட்டமைப்பின் திட்டமான “லும்பினி (நேபாளம்) - இந்தியாவின் புத்தக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான சர்வதேச மையம்" குறித்த படம் திரையிடப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த ஆண்டு புத்தப் பூர்ணிமா அன்று நேபாளத்தில் உள்ள லும்பினியில் அடிக்கல் நாட்டினார்.

 

இந்தியாவின் வரலாறு, புத்தரின் ஞானம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், ஐபிசி ஆஷாத பூர்ணிமா கொண்டாட்டங்களை தேசிய அருங்காட்சியகத்தில் நடத்துகிறது. சாரநாத்தில் தான் புத்தர் தனது முதல் பிரசங்கத்தை அளித்து தர்ம சக்கரத்தை இயக்கினார். இந்திய சந்திர நாட்காட்டியின்படி ஆஷாட மாதத்தின் முழு நிலவு நாளில் வரும் ஆஷாட பூர்ணிமா இலங்கையில் எசல போயா என்றும், தாய்லாந்தில் அசன்ஹா புச்சா என்றும் அழைக்கப்படுகிறது.

***

AP/CR/DL



(Release ID: 1936945) Visitor Counter : 130