அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஸ்டார்ட்-அப்களின் அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு என்பது தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 02 JUL 2023 2:17PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், "ஸ்டார்ட்-அப் அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு" புதுமையான கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதெனக் கூறினார்.

 

புதுதில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் சிஎஸ்ஐஆர் ஏற்பாடு செய்த தேசிய அறிவுசார் சொத்துரிமை  விழாவில் தொடக்க உரை ஆற்றிய அவர், ஸ்டார்ட்அப்களின் காப்புரிமைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை பதிவு செய்வதை தொழில்துறையுடன் இணைப்பது நாட்டில்  புதுமைகளையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்தவும், அவற்றின் திறனை மேம்படுத்தவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பல திட்டங்களைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக முத்ரா திட்டம் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 

புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட்-அப்களுக்கு மிகப்பெரிய அளவில்  ஊக்கமளிக்கப்படுவதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். “கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் மோடி அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளுக்கு மதிப்பளித்துள்ளார். அவரது சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது கூட, அறிவியல் தொடர்பான பிரச்சனைகளே முக்கியப் பொருளாக விவாதிக்கப்பட்டது” என்றார்.

 

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகால ஆட்சியில், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இன்று நாம் வளர்ந்த நாடுகளுக்கு சமமாக உள்ளதாகவும் அவர் கூறினார். “இன்று, தொழில்நுட்பப் பயன்பாட்டில் மற்ற நாடுகளுக்கு  சமமாக இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, குவாண்டம் கம்ப்யூட்டிங்கில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாம் உள்ளோம் என்றும் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

***

AP/CR/DL



(Release ID: 1936936) Visitor Counter : 133