குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவர் ஜூலை 4ஆம் தேதி அசாம் செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUL 2023 2:34PM by PIB Chennai

குடியரசு  துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஜூலை 04, 2023 அன்று அஸ்ஸாமுக்கு செல்கிறார். அங்கு அவர்,  குவஹாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஐஐடி- யின் 25வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

குவஹாத்திக்கு வந்தவுடன், குடியரசு துணைத்தலைவர் காமாக்யா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து தரிசனம் செய்வார்.

தமது பயணத்தின் போது, ஐஐடி கவுகாத்தியில் உள்ள மாணவர்களுடன் அவர்  உரையாடுவார்.

 

***

AP/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1936910) வருகையாளர் எண்ணிக்கை : 231
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Telugu , Kannada