இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் கிர்கிஸ்தான் மற்றும் ஹங்கேரியில் பயிற்சி பெற டாப்ஸ் அனுமதி அளித்துள்ளது

Posted On: 29 JUN 2023 6:48PM by PIB Chennai

இந்திய மல்யுத்த வீரர்களும்  இலக்கு ஒலிம்பிக் பதக்கமேடை  திட்ட (டாப்ஸ்) வீரர்களுமான வினேஷ் போகட்பஜ்ரங் புனியா ஆகியோர் சர்வதேசப் பயிற்சி முகாம்களுக்காக கிர்கிஸ்தான் மற்றும் ஹங்கேரிக்கு செல்ல உள்ளனர்.

இருவரும் தங்கள் முன்மொழிவுகளை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்  டாப்ஸ்  குழுவிற்கு அனுப்பியிருந்தனர்அவர்கள் கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா கிர்கிஸ்தானின் இசிக்-குல் நகருக்கு 36 நாள் பயிற்சி முகாமுக்கு செல்கிறார், உலக சாம்பியன் பட்டம் வென்ற வினேஷ் போகட் முதலில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கிற்குச் சென்று ஒரு வாரப் பயிற்சிக்குப் பின்  ஹங்கேரியின் டாடாவுக்கு 18 நாள் பயிற்சி முகாமுக்குச் செல்கிறார்.

வினேஷுடன் இயன்முறை மருத்துவர் அஸ்வினி ஜீவன் பாட்டில், இணைப் பயிற்சியாளர்  சங்கீதா போகட் மற்றும் பயிற்சியாளர் சுதேஷ், பஜ்ரங்குடன் பயிற்சியாளர் சுஜீத் மான், இயன்முறை மருத்துவர் அனுஜ் குப்தா, இணைப் பயிற்சியாளர் ஜிதேந்தர் மற்றும் உடல் பலம் மற்றும்  உடல் தகுதி  நிபுணர் காஸி ஹசன் ஆகியோர் செல்வார்கள்.

வினேஷும், பஜ்ரங்கும் ஜூலை முதல் வாரம் பயிற்சிக்குப்  புறப்படுவார்கள்.

 

---- 

SMB/KPG

 


(Release ID: 1936297) Visitor Counter : 168