வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
ஜி20-ன் யு20 செயல்பாட்டுக்குழு அகமதாபாத்தில் இரண்டு நாள் மேயர் மாநாட்டை நடத்தவுள்ளது
Posted On:
26 JUN 2023 2:21PM by PIB Chennai
ஜி20-ன் நகர்ப்புறம்20 (யு20) செயல்பாட்டுக்குழு அகமதாபாத்தில் 2023 ஜூலை 7,8 ஆகிய இரண்டு நாட்களுக்கு மேயர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மேயர் மாநாடு, ஜி20 நாடுகளின் மேயர்கள் மற்றும் பல்வேறு நகரங்களின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கல்வி பிரதிநிதிகள், இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நகரங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் யு20 செயல்பாட்டுக்குழு உள்ளது. இது பல்வேறு நகரங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு மூலம் நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவியத் திட்டத்திற்கு நகரங்களின் பங்களிப்பை முன்னெடுத்து செல்வதாகும்.
இம்மேயர்கள் மாநாட்டில் ஜி20 நாடுகளின் மேயர்கள், இந்திய நகரங்களின் 25 மேயர்கள் ஆகியோர் பங்கேற்று யு20 முன்னுரிமை பகுதிகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கல்வி நிறுவனம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் அகமதாபாத்தில் இந்த மேயர் மாநாடு நடைபெற உள்ளது.
2023 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற யு20 நகர ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 6 முன்னுரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமைகள் நகர்ப்புற விவகாரங்கள், உலக அளவில் நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
யு20 முன்னிரிமை குறித்த நான்கு கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. யு20 ஆறு முன்னுரிமைகள் குறித்து ஆறு வெள்ளை அறிக்கைகள் இந்த கருத்தரங்கில் வெளியிடப்பட உள்ளன.
இம்மாநாட்டில் இந்தியாவின் நகரப்புற நிலைமையை எடுத்துக்காட்டும் கண்காட்சி நடைபெற உள்ளது. நகர அளவிலான வெற்றிகள் முக்கியத்திட்டங்கள் மற்றும் புதுமை முன்னெடுப்புகள் குறித்து இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
***
AP/IR/RS/KRS
(Release ID: 1935426)
Visitor Counter : 197