பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கடற்படையின் உள்நாட்டுத் தேவைகள் குறித்த உரையாடல் மாநாடு மற்றும் வர்த்தகக் கருத்தரங்கம்: தொழில்துறைக்கான வாய்ப்புகள்
Posted On:
26 JUN 2023 1:29PM by PIB Chennai
இந்திய கடற்படையின் உள்நாட்டுத் தேவைகள் குறித்த உரையாடல் மாநாடு மற்றும் வர்த்தகக் கருத்தரங்கம்: தொழில்துறைக்கான வாய்ப்புகள் என்ற நிகழ்வை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்புடன் இணைந்து இந்திய கடற்படை 2023 ஜூன் 26 அன்று நடத்தியது.
பராமரிப்புத் தலைவர் துணை அட்மிரல் சந்தீப் நைதானி இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார்.
இந்த மாநாடு, இந்திய கடற்படை வீரர்களுடன் உரையாடுவதற்கு தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை , ஸ்டார்ட் அப் நிறுவனத்தாருக்கு சிறந்த வாய்ப்பை அளிதத்து. பாதுகாப்புத்துறையில் தன்னிறைவை அடையும் வகையில், இந்திய கடற்படையின் தேவைகள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதற்கானத் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் துறையினர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனத்தினர் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
***
AP/IR/RS/KRS
(Release ID: 1935383)
Visitor Counter : 190