பாதுகாப்பு அமைச்சகம்
9-வது சர்வதேச யோகா தினம்: ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பாதுகாப்புப் படையினர், இந்திய கடலோரக் காவல் படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் யோகா செய்தார்
Posted On:
21 JUN 2023 11:23AM by PIB Chennai
9-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, 2023 ஜூன் 21 அன்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் பாதுகாப்புப் படையினர், இந்திய கடலோரக் காவல் படையினருடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் யோகா செய்தார். கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் அவருடைய மனைவியும் கடற்படை வீரர்கள் நலவாரியத் தலைவருமான திருமதி கலா ஹரிகுமார், 120 அக்னி வீரர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யோகா நிபுணர் உடல் திறன், மன அமைதி ஆகியவற்றுக்காக மூச்சுப் பயிற்சி மற்றும் பல்வேறு ஆசனங்களை மேற்கொள்வது குறித்து பயி ற்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சர், யோகா பயிற்சியாளரை பாராட்டி அதில் பங்கேற்றவர்களுடன் உரையாடினார். உலக அளவில் யோகா தினத்தைக் கொண்டாடுவது நாட்டுக்குப் பெருமை அளிப்பதாகவும் இந்திய கலாச்சாரத்தை உலகம் ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் யோகாவைப் பிரபலப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இச்செய்தியை உலகுக்குக் கொண்டுசெல்வதில் இந்தியா வெற்றி அடைந்துள்ளதாகவும், யோகா பயிற்சி ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு பல்வேறு பயன்களை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தவித முதலீடும் இன்றி யோகா பயிற்சியை மேற்கொண்டு எண்ணற்றப் பயன்களைப் பெறமுடியும் என்று அவர் தெரிவித்தார். உடல், மனம், மற்றும் ஆன்மீக நலனுக்காக நாள் தோறும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுமாறு திரு ராஜ்நாத் சிங் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
***
(Release ID: 1933868)
SM/IR/KPG/KRS
(Release ID: 1934211)
Visitor Counter : 99