பிரதமர் அலுவலகம்
அறிவியல் பேச்சாளரும், வானியல் இயற்பியலாளருமான திரு நெய்ல் டி கிராஸ் டைசனுடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
21 JUN 2023 8:30AM by PIB Chennai
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் திரு நரேந்திர மோடி அந்நாட்டின் முன்னணி வானியல் இயற்பியலாளரும், அறிவியல் பேச்சாளரும் திரு நெய்ல் டி கிராஸ் டைசனுடனை சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களும் இளைஞர்களுக்கு இடையே அறிவியல் மனோபாவத்தை வளர்ப்பது குறித்த தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். விண்வெளித்துறையில் இந்தியா செயல்படுத்தி வரும் முனைப்பான நடவடிக்கைகளின் வேகமான முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
மேலும் அண்மையில் இந்தியா அறிமுகப்படுத்திய தேசிய விண்வெளிக்கொள்கையின் கீழ் தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடியும் திரு டைசனும் விவாதித்தனர்.
***
(Release ID: 1933802)
SM/ES/RJ/KRS
(रिलीज़ आईडी: 1934197)
आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam