சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான நீடித்த வளர்ச்சிக்கான 'அறிவுப் பகிர்வு தளத்தை' தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 20 JUN 2023 4:50PM by PIB Chennai

அறிவுப் பகிர்வுக்கும், புதுமையான சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய அறிவுப் பகிர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ள இது, சாலை வடிவமைப்பு, கட்டுமானம், சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற தலைப்புகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்பவர்களுக்கு உதவிகரமாக அமையும். இந்தத் தளம் உலகெங்கிலும் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதை ஊக்குவிப்பதுடன் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கும்.

வீடியோ பதிவுகள், பவர் பாயிண்ட் விளக்கக்காட்சிகள்,  மற்றும் பிடிஎஃப் கோப்புகள் வடிவில் சிறந்த நடைமுறைகளை  https://ksp.nhai.org/kb/ என்ற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அதை செயல்படுத்துவது குறித்து  ஆய்வு செய்யப்படும்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தொடர்ந்து விரைவாக மேம்படுத்தி வருகிறது. சாம்பல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களின் பயன்பாடு, நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் போன்றவை தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுவதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஊக்குவித்து வருகிறது.

 

சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு தேச வளர்ச்சிக்கு பங்களிக்க வல்லுநர்களையும் பொது மக்களையும் இந்த அறிவுப் பகிர்வுத் தளம் ஊக்குவிக்கும்.

***

SM/PLM/MA/KRS


(Release ID: 1933714) Visitor Counter : 184