சுற்றுலா அமைச்சகம்
கோவாவில் 4-வது சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் 2 நிகழ்வுகளுடன் இன்று தொடங்கியது
Posted On:
19 JUN 2023 6:27PM by PIB Chennai
கோவாவில் 4-வது சுற்றுலாப் பணிக்குழுக் கூட்டம் 2 நிகழ்வுகளுடன் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யஸோ நாயக், கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ரோகன் காண்டே, சுற்றலாத்துறைச் செயலாளர் திருமதி வித்யாவதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நீடித்த மற்றும் பொறுப்பான பயணத்திற்காக கப்பல் சுற்றுலா மாதிரியை உருவாக்குதல் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கப்பல் சுற்றுலா குறித்து அப்போது பேசிய திரு கிஷன் ரெட்டி, கோவா மாநிலம் சூரியன், மணல், கடல் என சரிவிகிதத்துடன் கலந்துள்ளதாகவும், அனைவரும் இந்தியாவின் இந்த அழகான நகரைக் காணவேண்டும் என்று தெரிவித்தார். அன்பு நிறைந்த கோவா மக்கள், சிறந்த இசை மற்றும் சுவையான உணவுடன் வாழக்கையை அனுபவிப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2015- 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,26,000மாக இருந்த நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 4,68,000 ஆக அதிகரித்தது என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் பேசிய மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் யஸோ நாயக், கப்பல் சுற்றுலா கோவா மாநில வளர்ச்சிக்கு மட்டும் வித்திடாமல் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
***
SM/IR/KPG/KRS
(Release ID: 1933486)