வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் 10-வது சுற்று பேச்சுவார்த்தை: கூட்டறிக்கை வெளியீடு

Posted On: 19 JUN 2023 4:34PM by PIB Chennai

இந்தியா-பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின்
10-வது சுற்று பேச்சுவார்த்தை 2023, ஜூன் 9 அன்று நிறைவடைந்தது.

முந்தைய சுற்று பேச்சுவார்த்தை போலவே இதுவும் காணொலி மற்றும் நேரடியாக நடைபெற்றது. பிரிட்டனைச் சேர்ந்த அதிகாரிகளில் பலர் பேச்சுவார்த்தைக்காக புதுதில்லி வந்தனர். மற்றவர்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.

10 கொள்கைகள் தொடர்பாக 50-க்கும் அதிகமான தனித்தனி அமர்வுகளில் நுட்பமான விவாதங்கள் நடைபெற்றன. இவற்றில் நகல் ஒப்பந்த அறிக்கை பற்றிய விரிவான விவாதமும் அடங்கும்.

11-வது சுற்று பேச்சுவார்த்தை வரவிருக்கும் மாதத்தில் நடைபெற உள்ளது.

***

(Release ID: 1933413)

SM/SMB/RJ/KRS


(Release ID: 1933450) Visitor Counter : 139