குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

குடிமக்கள் அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக நீர் சேமிப்பை மேற்கொள்ளுமாறு குடியரசுத் துணைத்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Posted On: 17 JUN 2023 3:06PM by PIB Chennai

குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றின் மூலம் பாரம்பரிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புத்துயிர் பெறச் செய்யுங்கள்: குடியரசுத் துணைத்தலைவர்

 

நீர் சேமிப்புக்கு முன்னுரிமை அளித்து முன்மாதிரியாக திகழ வேண்டுமென குடியரசுத் துணைத்தலைவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

 

இயற்கையைப் பாதுகாத்தல் என்பது இந்தியாவின் நாகரீக நெறிமுறையின் தவிர்க்க முடியாத அம்சமாகும்-  குடியரசுத் துணைததலைவர்

 

குடியரசுத் துணைத்தலைவர் 4வது தேசிய நீர் விருதுகளை வழங்கினார்

 

குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், அனைத்து குடிமக்களுக்கும் தண்ணீரைப் பாதுகாப்பதை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அம்சமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 4வது தேசிய நீர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், "குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகிய காரணிகள் மூலம் நமது பாரம்பரிய நீர் சேகரிப்பை குளங்கள் போன்ற கட்டமைப்புகளாக மீண்டும் புதுப்பிக்க அழைப்பு விடுத்தார்."

 

நீர்வள மேலாண்மைத் துறையில் முன்னுதாரணமாகச் செயல்பட்ட வெற்றியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர், பஞ்சாயத்து, மாநிலம் மற்றும் தேசிய அளவில் உள்ள அனைத்துப் பொதுப் பிரதிநிதிகளும் நீர்ப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள், நீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் அடிப்படைக் கடமைகள் போன்ற அரசியலமைப்பு விதிகளுக்கு கவனம் செலுத்திய குடியரசுத் துணைத்தலைவர், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற அரசின் முன்முயற்சிகள் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும்  தாக்கத்தை எடுத்துரைத்தார்.

 

தண்ணீரைப் பாதுகாப்பது இந்தியாவின் நாகரீக நெறிமுறைகளின் தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், இயற்கையின் கொடையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும் கூறினார். "இயற்கை வளங்களின் பயன்பாடு நமது தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

4வது தேசிய நீர் விருது வழங்கும் விழாவினை குடியரசுத் துணைத்தலைவர் தொடங்கி வைத்தார். 11 பிரிவுகளில் 41 வெற்றியாளர்கள் விழாவில் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டனர்.

 

நீர் பாதுகாப்புச் செய்தியைப் பெருக்குவதற்காக தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் தேசிய நீர் இயக்கத்தின் சின்னமான பிக்கு என்ற அனிமேஷன் கதாபாத்திரம் அடங்கிய குறும்படத்தையும்  குடியரசுத் துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்.

 

மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல், ஜல் சக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு, நீர் துறை செயலாளர் திரு பங்கஜ் குமார் வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

***

AD/CJL/DL



(Release ID: 1933115) Visitor Counter : 165