அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இந்திய எஸ்டிஇஎம்எம் வம்சாவளியினரை இணைப்பதற்கு ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை விஏஐபிஹெச்ஏவி அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
15 JUN 2023 3:48PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் பணிக்காக இந்தியக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களுடன் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல். கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சா வளியினரை இணைப்பதற்கு புதிய ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
வைஷ்விக் பாரதீய வைகியானிக் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான திட்டத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல். கணிதம், மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர்.
அறிவியல், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான நமது முயற்சியில் அறிவியல் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.
இதற்கான விண்ணப்பங்கள் 2023 ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை பெறப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932599
***
AD/IR/RS/GK
(रिलीज़ आईडी: 1932709)
आगंतुक पटल : 250