விவசாயத்துறை அமைச்சகம்

ஜி20 வேளாண் அமைச்சகக் கூட்டம் ஜூன்-15 முதல் 17 வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது

Posted On: 14 JUN 2023 2:37PM by PIB Chennai

ஜி20 வேளாண் அமைச்சகப் பணிக்குழுக் கூட்டம் 2023, ஜூன்-15 முதல் 17 வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு  நாடுகள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். பல்வேறு நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைமை இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

முதல் நாள் அன்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் திரு கைலாஷ் சௌத்ரி கண்காட்சியை தொடங்கிவைக்க உள்ளார். வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விதமாக, கண்காட்சி இடம்பெறும்.

இரண்டாம் நாளில் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பங்கேற்று ஜி20 கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள் மற்றும்  இதர பிரதிநிதிகளை வரவேற்கிறார். உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான நீடித்த வேளாண்மை, மகளிர் சார்ந்த வேளாண்மை,  நீடித்த உயிரி பன்முகத்தன்மை, பருவ நிலை தீர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932267  

***



(Release ID: 1932418) Visitor Counter : 214