சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாடு தழுவிய ரத்த தான அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் “உலக ரத்த தான தினத்தை” மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல் தொடங்கிவைத்தார்
Posted On:
14 JUN 2023 3:08PM by PIB Chennai
நாடு தழுவிய ரத்த தான அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் “உலக ரத்த தான தினத்தை” மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ரத்த தானம் என்பது உயர்வானது என்றும் நமது வளமான கலாச்சாரமும் சேவை மற்றும் ஒத்துழைப்பு பாரம்பரியமும் இதில் ஆழமாக வேரூன்றி உள்ளது என்றும் கூறினார். இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 14.6 மில்லியன் யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும் எப்போதும் ஒரு மில்லியன் யூனிட் ரத்தம் பற்றாக்குறையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ரத்த தானம் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் குறைவாக இருப்பதோடு பல கற்பிதங்களும் ஆரோக்கியமாக உள்ள ஒருவரை ரத்த தானம் செய்யாத வகையில், ஊக்கமிழக்கச் செய்கிறது என்று அவர் கூறினார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும் ரத்தத்திற்கு மாற்றாக எதுவும் இல்லை என்றும் ஒரு யூனிட் ரத்தம் 3 உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்றும் திரு பாகெல் தெரிவித்தார். ரத்த தானம் முதல் நிலையை பலவீனமாக்கிறது என்பது தவறான கருத்து என்று கூறிய அவர், ரத்த தானம் செய்த 24 – 48 மணி நேரத்திற்குள் ரத்தத்தில் பிளாஸ்மாவும் 3 வாரங்களுக்குள் ரத்த சிவப்பு அணுக்களும் சில நிமிடங்களுக்குள் வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்கள் உருவாகி வருகின்றன என்றார்.
ரத்த தானம் மற்றும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றி எதிர்காலத் தலைமுறைக்கு நாம் உணர்த்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ரத்த தான முகாமில் பங்கேற்றவர்களைச் சந்தித்த அமைச்சர், 100 முறைக்கு மேல் ரத்த தானம் செய்தவர்களைப் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932285
***
AD/SMB/KPG/GK
(Release ID: 1932367)
Visitor Counter : 177