தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிபர்ஜாய் புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலம் துவாரகாவில் வானொலி கோபுரம் பிரிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 14 JUN 2023 2:37PM by PIB Chennai

பிபர்ஜாய் புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்த 90 மீட்டர் உயர வானொலி கோபுரம் பிரிக்கப்பட்டது. புயலின் தாக்கத்தால், கோபுரத்தின் சுற்றுவட்டாரத்தில் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்கவும், விபத்துக்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டு பழமையான இந்தக் கோபுரத்தை சோதனையிட்ட சூரத் என்ஐடி மற்றும் சிசிடபிள்யுவை சேர்ந்த நிபுணர்கள் அதனை பிரித்தெடுக்குமாறு கடந்த ஜனவரி மாதமே பரிந்துரை செய்திருந்தனர். கோபுரம் பிரிக்கப்பட்டாலும் தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி துவாரகாவிலிருந்து சேவைகளை வழங்க வானொலி நிலையம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

******



 

AD/PKV/RR/GK


(रिलीज़ आईडी: 1932343) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu