இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு, காமன்வெல்த் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி செயின்ட் லூயிசில் பயிற்சி பெற எம்ஓசி ஒப்புதல்

प्रविष्टि तिथि: 13 JUN 2023 5:25PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்  மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) சமீபத்திய கூட்டத்தில் இலக்கு ஒலிம்பிக் போடியம் திட்டத்தின்  தடகள வீரர்களான மீராபாய் சானு, பிந்தியாராணி தேவி ஆகியோரின் வெளிநாட்டு பயிற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவர்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் பயிற்சி பெற உள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் செயின்ட் லூயிஸ் SQUAT பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவார்கள். வரவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு முன்னதாக அவர்களுக்கு இந்தப் பயிற்சி புத்துணர்வும், வலிமையும் அளிக்ககூடியதாகும்.

65 நாள் வெளிநாட்டு பயிற்சி முகாமில், இருவரும் இந்திய தலைமை பயிற்சியாளர் விஜய் சர்மா மற்றும் அவர்களின் பிசியோதெரபிஸ்ட் டெஸ்னீம் சயாத் ஆகியோருடன் இருப்பார்கள்.

அவர்களது விமானப் பயணச் செலவுகள், தங்குதல்  மற்றும் உணவு, தங்கும் கட்டணம், மருத்துவக் காப்பீடு, உள்ளூர் போக்குவரத்துச் செலவு, உடற்பயிற்சிக் கூடச் செலவுகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைச் செலவுகள் போன்றவற்றை அரசு ஏற்கிறது.

*** 

AP/PKV/GK

 


(रिलीज़ आईडी: 1932091) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Telugu , Kannada