பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
23 MAY 2023 8:49PM by PIB Chennai
வணக்கம் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் பிரதமரும் எனது அன்பு நண்பருமான மாண்புமிகு அந்தோனி அல்பனீஸ், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மேதகு ஸ்காட் மோரிசன், நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மின்ஸ், வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட், எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன், எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், நியூ சவுத் வேல்ஸ் அமைச்சரவையின் கௌரவ உறுப்பினர்கள், பார்மட்டா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் இன்று இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர்! உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
நண்பர்களே,
2014-ல் நான் இங்கு வந்தபோது, இந்தியாவின் எந்தப் பிரதமருக்காகவும் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். எனவே சிட்னியில் உள்ள இந்த அரங்கில், நான் இங்கே மீண்டும் ஒருமுறை வந்திருக்கிறேன், நான் தனியாக வரவில்லை. என்னுடன் பிரதமர் அல்பானீஸ் என்பவரும் வந்துள்ளார். பிரதம மந்திரி அவர்களே, உங்களது மிகவும் பரபரப்பான வேலைகளுக்கிடையே , நீங்கள் எங்கள் அனைவருக்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளீர்கள். இது இந்தியர்களாகிய எங்கள் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் சொன்னது போல ஆஸ்திரேலியா இந்தியா மீது வைத்திருக்கும் அன்பை எங்களுக்கு உணர்த்துகிறது. இந்த ஆண்டு அகமதாபாத்தில் இந்திய மண்ணில் பிரதமரை வரவேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இன்று, இங்கு லிட்டில் இந்தியாவின் அடிக்கல்லைத் திறந்து வைக்கும் போது என்னுடன் இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி நண்பரே, அந்தோணி! இந்த லிட்டில் இந்தியா ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தின் பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும். இந்த சிறப்பு மரியாதைக்காக நியூ சவுத் வேல்ஸ் பிரதமர், மேயர், துணை மேயர் மற்றும் பார்மட்டா நகர கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவு மிகப்பெரிய அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளின் பரிமாணம் அளப்பரியது. மிகப்பெரிய அடித்தளம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை! இந்த பரஸ்பர நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளிலிருந்து மட்டும் உருவாகவில்லை. உண்மையான காரணமும் அதற்குப் பின்னால் உள்ள உண்மையான பலமும் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களாகிய நீங்கள்தான்! நீங்கள்தான் அதன் உண்மையான பலம்.
நண்பர்களே , நமக்கிடையில், நிச்சயமாக ஒரு புவியியல் தூரம் உள்ளது, ஆனால் இந்தியப் பெருங்கடல் நம்மை இணைக்கிறது. நமது வாழ்க்கை முறை வேறுபட்டாலும், யோகா இப்போது நம்மை இணைக்கிறது. நாம் நீண்ட காலமாக கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர்கள், ஆனால் இப்போது டென்னிஸ் மற்றும் திரைப்படங்கள் கூட நம்மை இணைக்கின்றன. நம் நாட்டில் பண்டிகைகள் வித்தியாசமாக கொண்டாடப்பட்டாலும், தீபாவளி மற்றும் பைசாகி கொண்டாட்டங்களுடன் நாம் இணைந்திருக்கிறோம். இரு நாடுகளிலும் வெவ்வேறு மொழிகள் பேசப்படலாம் ஆனால் இங்கு மலையாளம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கும் பள்ளிகள் ஏராளமாக உள்ளன.
நண்பர்களே,
நமது கிரிக்கெட் உறவுகளும் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. கிரிக்கெட் மைதானத்தில் எந்த அளவுக்கு உற்சாகம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மைதானத்துக்கு வெளியேயும் நமது நட்பு ஆழமாகிறது.
நீங்கள் அனைவரும் இங்கே ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள், இங்குள்ள வளர்ச்சியைப் பார்க்கிறீர்கள். நம் இந்தியாவும் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் கனவு இருந்தது. இது உங்கள் கனவு இல்லையா? உங்கள் உள்ளத்தில் இருக்கும் கனவு என் இதயத்திலும் இருக்கிறது. இது என் கனவும் கூட. இது 140 கோடி இந்தியர்களின் கனவு.
நண்பர்களே,
இன்று உலகம் இந்தியாவின் ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு சாதனையையும் அறிய விரும்புகிறது. சமகால உலகம் செல்லும் உலக ஒழுங்கைப் பார்ப்பதும் சாத்தியங்களைத் தேடுவதும் மிகவும் இயல்பானது. இந்தியா பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட நாடு. இந்தியா ஜனநாயகத்தின் தாய். நாங்கள் தேசத்தை மட்டுமல்லாமல், உலகத்தையும் ஒரு குடும்பமாகக் கருதுகிறோம், எனவே இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கருப்பொருளை வசுதைவ குடும்பகம், ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்று வைத்திருக்கிறோம்.
கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின் போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பிய நாடு இந்தியா. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கி கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய நாடு இந்தியா. கொரோனா காலத்தில் நீங்களும் இங்கு பணியாற்றிய சேவை மனப்பான்மையே நமது கலாச்சாரத்தின் சிறப்பு. ,
நான் நேற்று தான் பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்தேன். அங்கு தமிழ் இலக்கியமான திருக்குறள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்ளூர் ஆளுநரால் இந்த மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும்போதும், நம் வேர்களைப் பற்றி பெருமைப்பட்டு, நம் வேர்களோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு வாழும் உதாரணம். இந்திய கலாசாரத்தின் நறுமணத்தை ஆஸ்திரேலியாவிலும் பரப்புகிறீர்கள். நீங்கள் இந்தியாவின் கலாச்சார தூதர்கள், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் பிராண்ட் தூதர்கள்.
நண்பர்கள்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை விரும்புகிறேன்! மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் - பாரத் மாதா கி ஜெய்!
பாரத் மாதா கி ஜெய்!
பாரத் மாதா கி ஜெய்!
மிக்க நன்றி!
***
(Release ID: 1931908)
Visitor Counter : 181
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam