மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
புனேயில் 12.06.2023 அன்று நடைபெற்ற உலகளாவிய ஜிபிஐ உச்சிமாநாட்டில் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பம், திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றினார்
Posted On:
12 JUN 2023 3:47PM by PIB Chennai
புனேயில் 12.06.2023 அன்று நடைபெற்ற உலகளாவிய ஜிபிஐ உச்சிமாநாட்டில் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பம், திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றினார்.
இந்த உச்சிமாநாடு அறிவுப் பரிமாற்றத்திற்கும், பொது மக்களுக்கான டிஜிட்டல் கட்டமைப்பின் சிறந்த நடைமுறைகளின் அமலாக்கத்தை அறிந்து கொள்வதற்கும், மிகச்சிறந்த வாய்ப்பாகும் என்று அவர் கூறினார். உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்பு பங்கேற்பையும், டிஜிட்டல் பொருளாதாரத்தையும் இது மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
2014-ல் இந்தியாவின் மொத்தப் பொருளாதாரத்தில் 3 முதல் 3.5 சதவீதம் வரை இருந்த டிஜிட்டல் பொருளாதாரம் இன்று 10 சதவீத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும், 2025-26 வாக்கில் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 20 சதவீத அளவிற்கு உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பொது மக்களுக்கான டிஜிட்டல் கட்டமைப்பு என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, வறுமையை குறைப்பது, சிறந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, சிறந்த பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை மற்றும் புதிய கண்டுபிடிப்பு போன்ற நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்கின் முன்னேற்றத்தை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931670
***
AP/SMB/AG/GK
(Release ID: 1931790)
Visitor Counter : 115