ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த மே மாதத்தில் சரக்கு ஏற்றியதில் ரயில்வே ரூ.14,642 கோடி ஈட்டியது

இடுகை இடப்பட்ட நாள்: 08 JUN 2023 5:23PM by PIB Chennai

2023 மே மாதம் ரயில்வே 134 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றி ரூ.14,641.83 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருமானத்தை விட 4 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதம் 131.50 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டு ரூ.14,083.86 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 260.28 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டது. கடந்த ஆண்டு இது 253.48 மில்லியன் டன்னாக இருந்தது. இரண்டு மாதங்களில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.28,512.46 கோடி இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும்.

மே மாதம் கையாளப்பட்ட சரக்குகளில் நிலக்கரி 65.89 மில்லியன் டன். இரும்புத் தாது 15.23 மில்லியன் டன், சிமெண்ட் 13.20 மில்லியன் டன், மற்ற பொருட்கள் 10.96 மில்லியன் டன், பெட்டகங்கள் 6.79 மில்லியன் டன், உரம் 4.89 மில்லியன் டன், உணவுத் தானியங்கள் 4.85 மில்லியன் டன், எண்ணெய் 4.23 மில்லியன் டன்.

***

 

AD/PKV/RR/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1930840) வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க: Manipuri , English , Urdu , Marathi , हिन्दी , Odia