கூட்டுறவு அமைச்சகம்

கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் அலுவலகத்தின் கணினி மயமாக்கல் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார்

Posted On: 07 JUN 2023 12:24PM by PIB Chennai

கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் அலுவலகத்தின் (சிஆர்சிஎஸ்) கணினி மயமாக்கல் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு செய்தார். புதுதில்லியில் நடைபெற்ற இதற்கான ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின்  கூடுதல் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டுறவு  மூலம் செழிப்பு என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப 2021 ஜூலை மாதத்தில் கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் தொடங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே கூட்டுறவுத்துறையில் வர்த்தகத்தை எளிதாக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்த அமைச்சகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் அலுவலகத்தை கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இந்த அலுவலகம் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 2002-ன் கீழ்,  பதிவு செய்யப்படும் கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்கும் பொறுப்புக் கொண்டதாகும். இதை கணினி மயமாக்குவதன் மூலம் பல மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.  இதற்கென உருவாக்கப்பட்டு வரும் மென்பொருள் மற்றும் இணையதளத்தை இம்மாதம் 26-ம் தேதி (26.06.2023) அன்று தொடங்கிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது பேசிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, கூட்டுறவு சங்கங்களின் மத்திய பதிவாளர் அலுவலகம் போட்டிகளை நடத்துவதன் மூலம் இணையதளத்தின் சிறந்த பயன்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வு ஆகியவற்றில் இளைஞர்களும் ஈடுபடுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930392

***

AD/PLM/KPG/GK



(Release ID: 1930472) Visitor Counter : 130