பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
“போதைப் பழக்கமற்ற அமிர்த காலம்”: போதைப் பொருட்கள் இல்லாத சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்கான தேசிய பிரச்சாரம் துவக்கம்
Posted On:
07 JUN 2023 12:02PM by PIB Chennai
உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31, 2023 அன்று, “போதை பழக்கமற்ற அமிர்த காலம்” என்ற தேசிய பிரச்சாரத்தை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் தொடங்கியது. ஆரோக்கியமான மற்றும் போதைப் பழக்கம் இல்லாத இந்தியாவை ஊக்குவிக்கும் இந்தப் பிரச்சாரம், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத நாட்டை உருவாக்கும் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகும். புகையிலை இல்லா இந்தியா என்ற மக்கள் குழுவின் தொழில்நுட்ப ஆதரவுடன் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. நாட்டில் குழந்தைகளிடையே அதிகரித்துள்ள புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தப் பிரச்சாரம் தீவிரமாக உள்ளது.
ஓ.டி.டி தளங்களில் புகையிலை காட்சிகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பிற்கு இந்த ஆணையத்தின் தலைவர் திரு பிரியங்க் கனூங்கோ மற்றும் பங்கேற்பாளர்கள் பாராட்டு தெரிவித்தனர். இது தவிர குழந்தைகளுக்கு புகையிலை பொருட்கள் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக, முன்மொழியப்பட்டுள்ள சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.
சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம், குழந்தைகளிடையே புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்கும் முக்கிய கருவியாக செயல்படும் என்பதால் இதை தீவிரமாக ஆதரிப்பதாக திரு பிரியங்க் கனூங்கோ கூறினார். பிரத்தியேகமான பிரச்சாரத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பேசுகையில், புகையிலை பயன்பாட்டினால் குழந்தைகள் மறைமுகமாக அதிகளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் பிரகாரி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுவரை சுமார் 60,000 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பள்ளிகள் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவது குறித்த தகவல்களை இந்தக் குழுவின் உறுப்பினர்கள் அரசுக்குத் தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930384
***
AD/BR/GK
(Release ID: 1930469)
Visitor Counter : 161