பிரதமர் அலுவலகம்
நாடு முழுவதும் பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க அனுமதிக்கும் முடிவுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
07 JUN 2023 12:32PM by PIB Chennai
நாடு முழுவதும் 2,000 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மூலம் பிரதமரின் மக்கள் மருந்தகங்களைத் திறக்க அனுமதிக்கும் முடிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பது அரசின் முன்னுரிமைகளில் ஒன்று என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மிக விலை உயர்ந்த மருந்துகள் கூட நாடு முழுவதும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பது அரசின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். கூட்டுறவுத்துறையின் இந்த மிகப் பெரிய முயற்சி கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்பதில் நான் முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளேன்”.
***
AD/PLM/KPG/GK
(रिलीज़ आईडी: 1930419)
आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam