பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஜம்முவில் ஓஎன்ஜிசி நிதியுதவியுடன் கட்டப்படும் தங்குமிடங்களுக்கு மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
06 JUN 2023 3:45PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட ஓஎன்ஜிசி நிறுவனம், ஜம்முவின் சித்ரா பகுதியில் தேசியப் பேரிடர் தணிப்பு மையம் மற்றும் விடுதிகள் கட்ட நிதியுதவி செய்துள்ளது. இந்தக் கட்டடப் பணிகளுக்கு மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, ஜம்மு & காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஜூன் 6-ம் தேதி அடிக்கல் நாட்டினர்.
ஸ்ரீநகர் மற்றும் அமர்நாத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஓஎன்ஜிசியின் நிதியுதவியுடன் கட்டப்படும் இந்த விடுதிகள், ஒரு வருடத்தில் 30,000 சுற்றுலாப் பயணிகள் தங்க வழிவகை செய்கிறது. ஓஎன்ஜிசி பேரிடர் தணிப்பு மையமானது தங்குமிடம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த தேசியப் பேரிடர் தணிப்பு மையம் மற்றும் விடுதியின் கட்டுமானம் 1.84 ஏக்கர் (8378 சதுர மீட்டர்) நிலத்தில் அமையவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அருண்குமார் சிங் உள்பட ஓஎன்ஜிசியின் மூத்த அதிகாரிகளும், ஜம்மு காஷ்மீரின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
***
AD/CR/KPG
(रिलीज़ आईडी: 1930253)
आगंतुक पटल : 226