சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் 3-வது சுகாதார பணிக்குழு கூட்டம்
प्रविष्टि तिथि:
05 JUN 2023 2:44PM by PIB Chennai
மனிதகுல வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான கருவியாக இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு திறன்களும், இந்தியாவின் டிஜிட்டல் பொருட்களும் திகழ்வதாக சுகாதாரத் துறையின் நித்தி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் சுகாதார பணிக்குழுவின் 3-வது கூட்டம் நடைபெறுகிறது. இதன் 2 ஆம் நாள் நிகழ்ச்சியில் “உலகளாவிய சுகாதார காப்பீடு மற்றும் சுகாதார சேவை முன்னேற்றத்திற்கான டிஜிட்டல் சுகாதார புத்தாக்கங்கள் மற்றும் தீர்வுகள்” பிரிவில் உரையாற்றிய டாக்டர் வி.கே.பால் இவ்வாறு கூறினார்.
உலகளாவிய சுகாதார காப்பீட்டுக்கு உதவும் டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் புத்தாக்கங்களை முன்னிறுத்துவதன் மூலம் டிஜிட்டல் சுகாதார முயற்சிகளை மேம்படுததும் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரலாக இந்தியா ஒலிப்பதாக டாக்டர் பால் கூறினார். மின்னணு சுகாதார வசதிகளை எளிதில் தொடர்பு கொள்ள முடியாத புறநகர் மண்டலங்களுக்கும் கொண்டு செல்வதற்கான தரமான சுகாதார வசதியாக டிஜிட்டல் இந்தியா திகழ வேண்டும் என தாம் கனவு காண்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார். அவசரகால சுகாதார தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில். உலகளாவிய சுகாதார காப்பீட்டை உருவாக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மிக முக்கியப் பங்காற்றும் என சுகாதார பணிக்குழுக்கள் நம்புவதாகவும் டாக்டர் வி.கே.பால் தெரிவித்தார்.
உலகளாவிய சுகாதார காப்பீட்டுக்கான டிஜிட்டல் சுகாதாரத்தில் அனைவரும் தங்களது இன்றியமையாத பங்களிப்பை செலுத்த வேண்டுமென அழைப்பு விடுத்த பால், டிஜிட்டல் சுகாதாரத்தின் சிறப்பம்சங்களையும் பட்டியலிட்டார்.
இந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் புத்தாக்கத் துறையின் இயக்குநர் டாக்டர் ஆலன் லாப்ரிக்யு, பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய வளர்ச்சிப் பிரிவு தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் எலியாஸ் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
***
AD/ES/RR/GK
(रिलीज़ आईडी: 1929948)
आगंतुक पटल : 215