சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜி20 இந்திய தலைமைத்துவம்: சுகாதாரம் மற்றும் நலத்துறை குழுமத்தின் 3-வது கூட்டம்

प्रविष्टि तिथि: 05 JUN 2023 4:27PM by PIB Chennai

மருத்துவ சிகிச்சைக்கு தேவையான முறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில்  உலகளாவிய இணைப்பை வலுப்படுத்துவது குறித்த கருத்தரங்கு ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் சுகாதாரம் மற்றும் நலத்துறை குழுமத்தின் 3- வது கூட்டத்திற்கு இடையே நடைபெற்றது. இதில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபா தொடக்கவுரையாற்றினார். உலகளாவிய சுகாதார அமைப்புகள், மற்றும் அத்துறை சார்ந்தவர்களுடன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்புக்காக  இணைந்து செயல்படுவது, நிதியளித்தல், மருத்துவ கருவிகளின் விநியோகம், பணியாளர், தகவல் ஆகியவற்றை திறன்பட விநியோகிக்க முடியும் என்று அவர் கூறினார்.

குறைந்த விலையிலான, தரமான, திறன் மிக்க, பாதுகாப்பான, மருத்துவ சிகிச்சைக்கு தேவையான முறைகளை பெறுவதில் இணைந்து செயல்படுவதை  உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கட்டமைப்பு நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னுரிமைகளை வகைப்படுத்துவதன் மூலம் வீண் முயற்சிகளை குறைக்க முடியும் என்றும், தேவையுள்ள மக்களுக்கு பொருட்களை விநியோகிக்க முடியும் என்றும் திரு பகவந்த கூபா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929936

**

AD/IR/RS/GK


(रिलीज़ आईडी: 1929947) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Telugu