பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டின் ஆகியோர் புதுதில்லியில் பேச்சு வார்த்தை நடத்தினர்

Posted On: 05 JUN 2023 1:27PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்  திரு லாயிட் ஆஸ்டினுடன்  புதுதில்லியில் ஜூன், 5 2023 அன்று இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். இருநாடுகளுக்கிடையேயான  பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பிலும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன.

இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை ஸ்டார்ட் -அப் முறைகளில் புதிய முறைகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை இணைந்து செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிவது என முடிவு செய்யப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளுக்கு கொள்கை இயக்கத்திற்கு வழிகாட்டும் அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான வழிவகைகளை அவர்கள் முடிவு செய்தனர். பாதுகாப்பு செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி பாதுகாப்பு குறித்து அண்மையில் நடைபெற்ற தொடக்கப் பேச்சுகளை  அவர்கள் வரவேற்றனர். இந்தோ- பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திர தன்மையைப் பராமரிப்பது, பிராந்திய பாதுகாப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929884

AD/IR/RS/GK

*********(Release ID: 1929929) Visitor Counter : 152