எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

50-வது உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மின்னணு சமையல் மாற்றத்திற்கான நுகர்வோர்ந்த சார்ந்த அணுகுமுறை குறித்த மாநாட்டை அரசு நடத்தியது

Posted On: 05 JUN 2023 12:02PM by PIB Chennai

50-வது உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மின்னணு சமையல் மாற்றத்திற்கான நுகர்வோர்ந்த சார்ந்த அணுகுமுறை குறித்த மாநாட்டை மத்திய அரசின் முன்துறை அமைச்சகத்தின் எரிசக்தி திறன் அமைப்பு புதுதில்லியில் நடத்தியது. மின்னணு சமையல் மாற்றதிற்காக நுகர்வோர் ஆராய்ச்சிக் குழுக்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரிடையே விவாதம் நடைபெற்றது. 

 இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மின்துறை கூடுதல் செயலாளர்  திரு அஜய் திவாரி, எதிர்காலத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்தாக மின்னணு சமையல் முறை இருக்கும் என்று குறிப்பிட்டார். இம்முறையை சிலர், சாதாரணமாக உணர்ந்தாலும், நகரப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு மின்னணு சமையல் முறை  பெரும் பயனளிப்பதாகத் தெரிவித்தார். பெரிய எண்ணிக்கையிலான மக்கள் தொகைக் கொண்ட நமது நாட்டில் ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றம் புவியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். 

நமது வீடுகளில் 24 மணி நேர மின் வசதி இருக்கும் நிலையில், மின்னணு சமையல் முறையை நோக்கி நாம்  செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சௌபாக்கியாத் திட்டத்தின் மூலம் இந்தியாவில்  18 மாதங்களில் மின் இணைப்பு இல்லாத 26மில்லியன் வீடுகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார். உலகில் எந்த இடத்திலும் இவ்வளவு குறுகிய தருணத்தில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து நகரப்புறப்பகுகளிலும், 23.5 மணி நேரத்திற்கும், கிராமப்பகுதிகளில் 23 மணிநேரத்திற்கும் மின் சேவை அளிக்கப்படுவதாக அவர் கூறினார். உலகில் 700மில்லியன் மக்களுக்கு இதுவரை மின்சார வசதி கிடைக்கப்பெறவில்லை. உலகில் அனைத்துப்பகுதிகளுக்கும் மின் சேவையை அளிப்பது ஜி20 மாநாட்டின் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று மின்துறை கூடுதல் செயலாளர் அஜய் திவாரி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929859

AD/IR/RS/RK

 

***


(Release ID: 1929892) Visitor Counter : 178