சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜி 20 இந்தியா தலைமை: 3வது சுகாதார பணிக்குழு கூட்டம் (HWG)

Posted On: 04 JUN 2023 1:06PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் 3வது ஜி20 சுகாதார பணிக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார்.

 

தொற்றுநோய்களின் அச்சுறுத்தல் இன்னமும் முடிந்துவிடவில்லை.  சுகாதார அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவது அவசியம்: டாக்டர் பாரதி பிரவின் பவார்

 

"கோவிட் மேலாண்மையானது பலதரப்பு கூட்டாண்மைகளின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது. இவை அடிப்படை சுகாதார கட்டமைப்புக்கு  மிகவும் பயனுள்ள மற்றும் மீள்தன்மை கொண்டவையாக இருக்கும்.

 

ஆரோக்கியமான மற்றும் ஊக்கமளிக்கும் உலகத்தை உருவாக்க உலகளாவிய சுகாதார ஆற்றலை ஆதரிக்கவும், பயன்படுத்தவும், எளிதாக்கவும் ஜி 20 ஐ விட சிறந்த தளம் இருக்க முடியாது: திரு ஜி கிஷன் ரெட்டி

 

பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய அளவில் சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் மட்டுமே பயனளிக்கக் கூடிய தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் செயல்பாட்டை எளிதாக்க முடியும்: பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல்

 

ஜி20 இந்தியாவின் தலைமையில்  இன்று நடைபெற்ற 3வது சுகாதார பணிக்குழு கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் உரையாற்றினார். "தொற்றுநோய்களின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை. ஒருங்கிணைந்த சுகாதார அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்." என்றார். நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்பி சிங் பாகேல் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட டாக்டர் பாரதி பிரவின் பவார்,  தொற்றுநோய் பாதிப்புகளுக்கு மத்தியில் அல்லாமல் சாதாரண காலத்தில் தான் கூட்டாண்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கோவிட்-19 தொற்றுநோய் பரவல் எடுத்துக்காட்டியது. மேலும் நாம் மீள்தன்மை கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்ப சுகாதாரம் அதன் அடிப்படையாகும். ஜி20 உறுப்பினர்களாக நாம் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அறிவைப் பகிர்வதற்கும், இணைப்பை உருவாக்குவதற்கும், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும் முடிவுகளை ஒன்றாகச் செயல்படுத்துவதற்கும் உதவுகிறது" என்று அவர் கூறினார். தொற்றுநோய் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுவதற்காக தொற்றுநோய்கள் காத்திருக்காது எனவே இப்போதே அதற்காக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

 

உலகளாவிய சுகாதார அரங்கில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நடந்துகொண்டிருக்கும் முயற்சிகளை ஒன்றிணைக்க, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்வகிக்கும் இணைப்பு, டிஜிட்டல் சுகாதாரம் பற்றிய உலகளாவிய முன்முயற்சியின் இந்தியாவின் முன்மொழிவையும் டாக்டர் பவார் பிரதிநிதிகளுக்குத் தெரிவித்தார். "இந்த முயற்சியால் நாடுகளுக்கிடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கவும், தொழில்நுட்பத்தின் பலன்கள் உலகின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் முடியும்" என்று அவர் கூறினார்.

 

சுகாதாரப் பாதுகாப்பில் இந்திய பாரம்பரிய அறிவு அமைப்புகளின் பங்களிப்பைக் குறிப்பிட்ட திரு கிஷன் ரெட்டி, "இந்திய பாரம்பரிய அறிவு  அனைவருக்கும் தடுப்பு மற்றும் முழுமையான நல்வாழ்வை வழங்கியது" என்று கூறினார். உலகம் முழுவதும் ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் குறிப்பிடத்தக்க தாக்கம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். "இந்திய நாகரிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆயுர்வேதம் அல்லது வாழ்வின் அறிவியலை நமக்கு அளித்துள்ளது. இது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மருத்துவ நடைமுறையாகும் என்றார்.

 

இந்தியாவை மருத்துவ மதிப்பு பயணத்தின் புதிய மையமாக மாற்றும் மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர், இந்தியா குறைந்த செலவில், திறமையான மற்றும் நம்பகமான சுகாதார சேவையின் தாயகமாக உள்ளது என்று கூறினார்.

 

திரு கிஷன் ரெட்டி, "உலகின் மருந்தகம்" என்ற இந்தியாவின் அங்கீகாரத்தை எடுத்துக்காட்டினார். ஹைதராபாதில் உள்ள ஜீனோம்  மட்டும் உலகின் தடுப்பூசி உற்பத்தியில் 33% பங்களிப்பதாக அவர் கூறினார்.

 

பேராசியர் எஸ் பி சிங் பாகேல், தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்கு பலதரப்பு முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டார். "சமீபத்திய கோவிட் 19 தொற்றுநோய் ஒரு நிலையான சுகாதார அமைப்பின் மூலம் மட்டுமே நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை நமக்குக் கற்பித்தது. பிராந்திய, தேசிய மற்றும் உலக அளவில் சுகாதாரத் துறையில் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் தொற்றுநோயைத் தடுப்பது, தயார்நிலை மற்றும் சிகிச்சை ஆகியவற்றை எளிதாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

 

திரு ராஜேஷ் பூஷன், இந்தியாவின் ஜி 20 தலைமையின் கருப்பொருள்,  “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்பது உலகளாவிய சுகாதார காப்பீட்டின் பரந்த கருத்தையும் குறிப்பிடுகிறது என்று குறிப்பிட்டார்.

 

இந்தோனேசிய மற்றும் பிரேசிலிய ட்ரொய்கா உறுப்பினர்கள் மூன்று சுகாதார முன்னுரிமைகளை சுட்டிக் காட்டியதற்காக இந்திய தலைமையைப் பாராட்டினர்.

***

SM/CJL/DL



(Release ID: 1929726) Visitor Counter : 209