சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஜூன் 4 முதல் ஹைதராபாத்தில் தொடங்கும் 3வது ஜி20 சுகாதார பணிக்குழு கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் தயாராகிறது

Posted On: 03 JUN 2023 3:22PM by PIB Chennai

ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக 3வது சுகாதார பணிக்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்தக்கூட்டம்  மூன்று முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும். ஹைதராபாத்தில் நாளை தொடங்கும் மூன்று நாள் நிகழ்வுக்கு முன்னதாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கும் போது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. லவ் அகர்வால் இதனை தெரிவித்தார்.

ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம், வாசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருளுடன் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கு முன்பு தலைமைப் பொறுப்பை வகித்த இந்தோனேசியாவும், அடுத்து பொறுப்பேற்கவுள்ள பிரேசிலும் வளரும் நாடுகளாக இருப்பதால், உலகளாவிய தெற்கின் கவலைகளை வெளிப்படுத்த இந்த ஜி20 தலைமைத்துவம்  ஒரு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜி20 சுகாதார முன்னுரிமைகள் பற்றி விரிவாகக் கூறிய திரு லாவ் அகர்வால், இந்தியாவின் தலைமைத்துவம்,  சுகாதார அவசரநிலை தடுப்பு, தயார்நிலை மற்றும் பதில் நுண்ணுயிர் எதிர்ப்பு  மற்றும் ஒரு சுகாதார கட்டமைப்பில் கவனம் செலுத்துதல், அணுகலை மையமாகக் கொண்டு மருந்துத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்னுரிமைகளில் கவனம் செலுத்துகிறது என்றார். இந்த முன்னுரிமைகளுடன் இணைந்து, மருத்துவ மதிப்பு பயணம், ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், சுகாதார துறையில் பாரம்பரிய மருத்துவத்தின் பயன்பாடு மற்றும் பொருத்தம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும் ஒவ்வொரு சுகாதார பணிக்குழு கூட்டத்திற்கும் இணை நிகழ்வுகள் மற்றும் பக்க நிகழ்வுகள் நடத்தப்படும். 3 வது சுகாதார பணிக்குழு கூட்டம், அதன் பக்க நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

 

***

LG/PKV/SG/DL

 



(Release ID: 1929646) Visitor Counter : 118