பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம்(என்ஐபிசிசிடி) கவுகாத்தியில் ‘ஊட்டசத்து மதிப்பீடு & உயரம்/எடை அளவீடு’ குறித்த பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
Posted On:
01 JUN 2023 2:39PM by PIB Chennai
2023 மே 29-31 வரை கவுகாத்தியில் உள்ள மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின்(என்ஐபிசிசிடி) மண்டல மையத்தில் அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் செயல்பாட்டாளர்களுக்கு ‘ஊட்டச்சத்து மதிப்பீடு & உயரம்/எடை அளவீடு’ குறித்த பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஊட்டச்சத்து மதிப்பீடு என்பது அங்கன்வாடி பணியாளர்களுக்கு அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரு செயலியாகும். இந்த செயலி, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் அதன் பயனாளிகளைக் கண்காணிக்க உதவுகிறது.
2023 மே 30-31 வரை சக்ஷாம் அங்கன்வாடி திட்டத்தின் செயல்பாட்டாளர்களுக்கான ‘அங்கன்வாடி மையங்களில் குழந்தை மதிப்பீட்டு உத்திகள்’ என்ற தலைப்பில் இந்தூரில் உள்ள என்ஐபிசிசிடி மண்டல மையத்தில் பயிற்சி நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டது. 32 பேர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
1. மதிப்பீடு மற்றும் அறிக்கையிடலின் கோட்பாடுகள்
2. தாய் மற்றும் குழந்தை பாதுகாப்பு அட்டையின் பயன்பாடு
3. உலக சுகாதார அமைப்பின் வளர்ச்சி விளக்கப்படம்
4. குழந்தை மதிப்பீட்டு அட்டை
மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1928968
***
AD/CR/GK
(Release ID: 1929097)
Visitor Counter : 150