நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-2023 நிதியாண்டிற்கான இந்திய மத்திய அரசின் (தற்காலிக/தணிக்கை செய்யப்படாத) கணக்குகள்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAY 2023 4:07PM by PIB Chennai

2022-23-ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் (தற்காலிக/தணிக்கை செய்யப்படாத) கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு ;

2022-23-ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.24,55,706 கோடி வருவாய் பெற்றுள்ளது. இதில் ரூ.20,97,368 கோடி வரி வருவாய், ரூ.2,86,151 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ.72,187 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் ஆகும். கடன் அல்லாத மூலதன ரசீதுகளில் கடன்களின் மீட்பு மூலம் ரூ.26,152 கோடியும், இதர மூலதன ரசீதுகள் மூலம் ரூ.46,035 கோடியும் அடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் மத்திய அரசால் வரிப் பகிர்வுப் பகிர்வாக மாநில அரசுகளுக்கு ரூ.9,48,406 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.50,015 கோடி அதிகமாகும்.

மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்தச் செலவு ரூ.41,88,837 கோடி ஆகும். இதில் ரூ.34,52,518 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.7,36,319 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், ரூ.9,28,424 கோடி வட்டி செலுத்துதலாகவும், ரூ.5,30,959 கோடி பெரிய மானியங்கள் மூலமாகவும் உள்ளது.

******

AP/CR/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1928789) வருகையாளர் எண்ணிக்கை : 432
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali