பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2022 ஐஏஎஸ்/ சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 20 இடங்கள் பிடித்தவர்களை டாக்டர் ஜிதேந்திர சிங் கௌரவித்தார்
Posted On:
30 MAY 2023 5:14PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை, பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று, அகில இந்திய ஐ.ஏ.எஸ். சிவில் சர்வீசஸ் தேர்வு 2022- ல் முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களை அழைத்து கௌரவித்தார்.
முதலிடம் பிடித்த 20 பேரில் 60 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர், இது பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 9 ஒன்பது ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றத்தின் சிறந்த பிரதிபலிப்பாகும் என்று அமைச்சர் கூறினார். கடந்த ஆண்டைப் போலவே முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பெண்கள் என்பதை நினைவுகூர்ந்த அவர், 2023 சிவில் சர்வீசஸ் தேர்வில் ஹாட்ரிக் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு முதல் 20 இடங்களில், 8 பொறியாளர்கள் மற்றும் ஒரு மருத்துவர் இருப்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்.
முதல் 20 பேரில், பீகார், தில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர் இடம் பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் இதில் அடங்குவர். அரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றைச் சேர்ந்த தலா 2 பேரும், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
******
AD/PKV/KRS
(Release ID: 1928400)
Visitor Counter : 174