தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"சர்வதேச போக்குவரத்தின் வரையறை" குறித்த இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) ஆலோசனை படிவத்தில் கருத்துகள்/எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

प्रविष्टि तिथि: 30 MAY 2023 3:36PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மே 02, 2023 அன்று "சர்வதேச போக்குவரத்தின் வரையறை" குறித்த ஆலோசனை படிவத்தை வெளியிட்டது. பங்குதாரர்களிடமிருந்து கலந்தாய்வுப் படிவத்தில்   எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மே 30, 2023 என நிர்ணயிக்கப்பட்டது. மற்றும் எதிர் கருத்துகளுக்கு ஜூன் 13, 2023 கடைசி தேதியாகும்.

கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தொழில்துறை சங்கத்தின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை முறையே ஜூன் 20, 2023 மற்றும் ஜூலை 04, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்/எதிர் கருத்துகள் திரு அகிலேஷ் குமார் திரிவேதி, ஆலோசகர் (நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் & உரிமம்), இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (TRAI) அனுப்பலாம், முன்னுரிமை மின்னணு வடிவத்தில் advmn@trai.gov.in.எனும்  மின்னஞ்சலுக்கு ஏதேனும் தெளிவு/தகவல்களுக்கு, திரு அகிலேஷ் குமார் திரிவேதி, ஆலோசகர் (நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம் & உரிமம்), இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைபேசி எண் +91-11- 23210481 இல் தொடர்பு கொள்ளலாம்.

******

(Release ID: 1928284)

JL/AD/KRS


(रिलीज़ आईडी: 1928356) आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Telugu , Malayalam , Urdu , Marathi , Gujarati , English