பிரதமர் அலுவலகம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் வெளியிட்டார்

"புதிய நாடாளுமன்றம் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும்"

"இந்தியாவின் உறுதியை உலகிற்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயகத்தின் கோவில் இது"

"இந்தியா முன்னேறும் போது உலகம் முன்னேறும்"

“புனிதமான செங்கோலின் கண்ணியத்தை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். சபை நடவடிக்கைகளின் போது செங்கோல் நம்மை உற்சாகப்படுத்தும்’’

"நமது ஜனநாயகம் நமது உத்வேகம், நமது அரசியலமைப்பு சட்டம் நமது உறுதிப்பாடு "

"அமிர்த காலம் என்பது நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை உருவாக்கும் காலகட்டம்"

“இன்றைய இந்தியா அடிமை மனப்பான்மையை விட்டு கலையின் பழமையான பெருமையை தழுவி வருகிறது. இந்த முயற்சிக்கு இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு வாழும் உதாரணம்’’

"இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு துகளிலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை நாம் காண்கிறோம்"

"முதல் முறையாக பணியாளர்களின் பங்களிப்பு புதிய நாடாளுமன்றத்தில் அழியாமல் ந

Posted On: 28 MAY 2023 2:25PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்பாகபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கிழக்கு-மேற்கு திசையை நோக்கிய உச்சியில் நந்தியுடன் கூடிய செங்கோலை பிரதமர் நிறுவினார். விளக்கேற்றி வைத்த அவர்செங்கோல் மீது  மலர்களை தூவினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் அழியாத சில தருணங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். சில தேதிகள் காலத்தின் முகத்தில் அழியாத கையொப்பமாக மாறும். 2023 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி அத்தகைய மறக்க முடியாத ஒரு நாள் என்று பிரதமர் கூறினார். "இந்திய மக்கள் அமிர்தப் பெருவிழாவுக்காக  ஒரு பரிசை வழங்கியுள்ளனர்" என்று அவர் கூறினார். இந்த மகத்துவமிக்க  நிகழ்வில் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இது ஒரு கட்டிடம் மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் கூறினார். "இந்தியாவின் உறுதிப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயகத்தின் கோவில் இது, இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் திட்டமிடலை யதார்த்தத்துடன் இணைக்கிறது, கொள்கையை உணர்தல், மன உறுதியை நிறைவேற்றுவது மற்றும் சங்கல்பத்தை சித்தியுடன் இணைக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் ஊடகமாக இது அமையும். இது தற்சார்பு இந்தியாவின் சூரிய உதயத்தைக் காணுவதுடன், வளர்ந்த இந்தியாவின்  உணர்வைக்  காணும். இந்தப் புதிய கட்டிடம் பழங்கால மற்றும் நவீனத்துவம் இணைந்து வாழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டு’’  என்று பிரதமர் கூறினார்.

"புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலம் மட்டுமே புதிய மாதிரிகளை நிறுவ முடியும். புதிய இந்தியா புதிய இலக்குகளை உணர்ந்து புதிய வழிகளை வகுத்து வருகிறது. ஒரு புதிய ஆற்றல், புதிய வைராக்கியம், புதிய உற்சாகம், புதிய சிந்தனை மற்றும் ஒரு புதிய பயணம் ஆகியவற்றுடன்  புதிய தரிசனங்கள், புதிய திசைகள், புதிய தீர்மானங்கள் மற்றும் ஒரு புதிய நம்பிக்கையும் உள்ளது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.  இந்தியாவின் உறுதியையும், குடிமக்களின் வீரியத்தையும், இந்தியாவில் மனித சக்தியின் வாழ்க்கையையும் உலகம் மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் நோக்குகிறது என்று பிரதமர் கூறினார். "இந்தியா முன்னேறும் போது, உலகம் முன்னேறும்" என்று அவர் குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியாவின் வளர்ச்சியில் இருந்து உலகின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார்.

புனிதமான செங்கோலை நிறுவியதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், பெரிய சோழப் பேரரசில், சேவைக் கடமை, தேசத்தின் பாதையின் அடையாளமாக செங்கோல் காணப்பட்டது என்றார். ராஜாஜி, ஆதீனம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த செங்கோல் அதிகார மாற்றத்தின் புனித சின்னமாக மாறியது. இன்று காலை விழாவை ஆசிர்வதிக்க வந்த ஆதீன துறவிகளை பிரதமர் மீண்டும் வணங்கினார். “இந்த புனிதமான செங்கோலின் கண்ணியத்தை நாம் மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். சபை நடவடிக்கைகளின் போது இந்த செங்கோல் நம்மை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்” என்றார் அவர்.

"இந்தியா ஒரு ஜனநாயக நாடு  மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும் கூட", உலக ஜனநாயகத்திற்கான முக்கிய அடித்தளம் நாடு என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜனநாயகம் என்பது இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒரு அமைப்பு மட்டுமல்ல, அது ஒரு கலாச்சாரம், சிந்தனை மற்றும் பாரம்பரியம் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.  வேதங்களைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அது ஜனநாயகக் கூட்டங்கள் மற்றும் குழுக்களின் கொள்கைகளை நமக்குக் கற்பிக்கிறது என்று எடுத்துரைத்தார். ஒரு குடியரசின் விளக்கத்தைக் காணக்கூடிய மகாபாரதத்தையும் அவர் குறிப்பிட்டார், மேலும் இந்தியா வைஷாலியில் வாழ்ந்து ஜனநாயகத்தை சுவாசித்துள்ளது என்று கூறினார். "பஸ்வேஸ்வர பகவானின் அனுபவ மண்டபம் நம் அனைவருக்கும் பெருமைக்குரியது" என்று மோடி மேலும் கூறினார். தமிழகத்தில் கி.பி.900-ம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டுகளை எடுத்துரைத்த பிரதமர், இன்றைய காலகட்டத்திலும் இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது என்றார். "நமது ஜனநாயகம் நமது உத்வேகம் ; நமது அரசியலமைப்பு சட்டம் நமது தீர்மானம். இந்தத் தீர்மானத்தின் மிகப்பெரிய பிரதிநிதி இந்திய நாடாளுமன்றம்’’ என்று திரு மோடி குறிப்பிட்டார். ஒரு ஸ்லோகத்தை வாசித்த பிரதமர், முன்னோக்கி நகர்வதை நிறுத்துபவர்களை அதிர்ஷ்டம் கைவிடும். ஆனால் முன்னேறிச் செல்வோரை அது கைகொடுத்து உயர்த்தி விடும் என்றார்.

பல ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு, பலவற்றை இழந்த பிறகு, இந்தியா மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கி அமிர்த காலத்தை அடைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். “அமிர்த காலம் என்பது நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை உருவாக்கும் காலகட்டமாகும். இது தேசத்திற்கு ஒரு புதிய திசையை கொடுக்கும் அமிர்த காலம். இது எண்ணற்ற லட்சியங்களை நிறைவேற்றும் அமிர்த காலம்”, என்று ஆவர் தெரிவித்தார். ஜனநாயகத்திற்கான புதிய உயிர்நாடியின் அவசியத்தை ஒரு வசனத்தின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், ஜனநாயகத்தின் பணியிடமான   நாடாளுமன்றமும் புதியதாகவும் நவீனமாகவும் இருக்க வேண்டும் என்றார்.

இந்தியாவின் செழிப்பு மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். பல நூற்றாண்டுகளின் அடிமைத்தனம் இந்தப் பெருமையைப் பறித்தது என்றார். 21ம் நூற்றாண்டின் இந்தியா நம்பிக்கையால் நிரம்பியுள்ளது. இன்றைய இந்தியா அடிமை மனப்பான்மையை விட்டுவிட்டு கலையின்  பழமையான பெருமையைத் தழுவி வருகிறது. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இந்த முயற்சிக்கு ஒரு உயிருள்ள உதாரணம். இந்தக் கட்டிடத்தில் விராசத் (பரம்பரை), வாஸ்து (கட்டிடக்கலை), கலா (கலை), கௌசல் (திறன்), சமஸ்கிருதம் (கலாச்சாரம்)  சம்விதான் (அரசியலமைப்பு) ஆகியவற்றின் குறிப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.  மக்களவையின் உள்புறங்கள் தேசிய பறவையான மயிலையும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரையையும் கருப்பொருளாகக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய மரமான ஆலமரம் உள்ளது. புதிய கட்டிடம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் சிறப்புகளை உள்ளடக்கியது. ராஜஸ்தானில் இருந்து கிரானைட், மகாராஷ்டிராவில் இருந்து மரம் மற்றும் பதோய் கைவினைஞர்களின் கம்பளம் ஆகியவை கொண்டுவரப்பட்டதை அவர் குறிப்பிட்டார். "இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு துகளிலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை நாம் காண்கிறோம்" என்று அவர் கூறினார்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பணிகளை மேற்கொள்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், சபையில் தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் இருக்கைகளின் பற்றாக்குறை பற்றி தெரிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் தேவை பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வந்ததாகவும், பபுதிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது  காலத்தின் தேவை என்றும் பிரதமர் கூறினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு, பொருத்தப்பட்டிருப்பதுடன், அரங்குகளும் சூரிய ஒளியில் பிரகாசிப்பதாக  அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பதில் பங்களித்த 'பணியாளர்களுடன் தனது தொடர்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், நாடாளுமன்றத்தை நிர்மாணிக்கும் போது 60,000 பணியாளர்களுக்கு  வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் புதிய காட்சியகம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "புதிய நாடாளுமன்றத்தில் பணியாளர்களின் பங்களிப்பு அழியாத இடத்தைப் பிடித்திருப்பது  இதுவே முதல் முறை" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 9 ஆண்டுகளைப் பற்றிப் பேசிய பிரதமர், எந்தவொரு நிபுணரும் இந்த 9 ஆண்டுகளை புனரமைப்பு மற்றும் ஏழைகள் நலனைக் கொண்ட ஆண்டுகளாகக் கருதுவார் என்றார். புதிய கட்டிடத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த நேரத்தில், ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்த திருப்தியையும் உணர்ந்தேன். இதேபோல், 11 கோடி கழிப்பறைகள், கிராமங்களை இணைக்க 4 லட்சம் கிமீ சாலைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பஞ்சாயத்து பவன்கள் அமைக்கப்பட்டது  குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். "பஞ்சாயத்து பவனில் இருந்து நாடாளுமன்றம் வரை, நாடு மற்றும் மக்களின் வளர்ச்சி என்ற  ஒரே ஒரு உத்வேகம் மட்டுமே எங்களை வழிநடத்தியது" என்று அவர்  கூறினார்.

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை நினைவுகூர்ந்த பிரதமர், ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் அந்த நாட்டின் உணர்வு விழித்தெழும் காலம் வரும் என்றார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் போது சுதந்திரத்திற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அத்தகைய ஒரு காலம் வந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். “காந்திஜி ஒவ்வொரு இந்தியரையும் சுயராஜ்யம் என்ற தீர்மானத்துடன் இணைத்திருந்தார். ஒவ்வொரு இந்தியனும் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த நேரம் அது. அதன் விளைவுதான் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது’’, என்று பிரதமர் குறிப்பிட்டார். விடுதலையின் அமிர்த காலம் என்பது சுதந்திர இந்தியாவில் ஒரு கட்டம், இதை அந்த வரலாற்று காலத்துடன் ஒப்பிடலாம் என்று திரு மோடி கூறினார்.  இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளை அடுத்த 25 ஆண்டுகளில் நிறைவு செய்யும் என்று கூறிய பிரதமர்ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்புடன் இந்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “இந்தியர்களின் நம்பிக்கை என்பது தேசத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை என்பதற்கு வரலாறு சாட்சி”, என்று பிரதமர் குறிப்பிட்டார், அப்போது இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உலகின் பல நாடுகளில் ஒரு புதிய விழிப்புணர்வை எழுப்பியது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை நிறைந்த ஒரு நாடு, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் பெரும் மக்கள்தொகையுடன், நம்பிக்கையுடன் முன்னேறும்போது, அது உலகின் பல நாடுகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு சாதனையும் வரும் நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சாதனையாக அமையப் போகிறது. வளர்ச்சிக்கான உறுதிப்பாடு பல நாடுகளின் பலமாக மாறும் என்பதால் இந்தியாவின் பொறுப்பு பெரிதாகிறது என்று பிரதமர் கூறினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம், அதன் வெற்றியில் தேசத்தின் நம்பிக்கையை வலுப்படுத்தி, அனைவருக்கும் வளர்ந்த நாடு என்ற உத்வேகத்தை  அளிக்கும். நாம் முதலில் தேசம் என்ற உணர்வோடு செல்ல வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடமையின் பாதையை நாம் வைத்திருக்க வேண்டும். நம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு நமது நடத்தையில் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். நாம் நமது  பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய நாடாளுமன்றம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும் பலத்தையும் அளிக்கும் என்று பிரதமர் கூறினார். நமது பணியாளர்கள் நாடாளுமன்றத்தை இவ்வளவு பிரமாண்டமாக ஆக்கியிருந்தாலும், அதை தெய்வீகமாக தங்கள் அர்ப்பணிப்புடன் உருவாக்குவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என்றார். நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 140 கோடி இந்தியர்களின் தீர்மானம்தான் நாடாளுமன்றத்தை புனிதமாக்குகிறது என்றார். இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வரும் நூற்றாண்டுகளை அலங்கரித்து, வரும் தலைமுறைகளை பலப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஊனமுற்றோர் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அதிகாரமளிக்கும் பாதை, விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளிப்பது  ஆகியவை இந்த நாடாளுமன்றத்தின் வழியாகச் செல்லும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.  “இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும், ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு துகளும் ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்படும்” என்று திரு மோடி கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உருவாக்கப்படும் புதிய சட்டங்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்றும், வறுமையை இந்தியாவிலிருந்து வெளியேற்றவும், நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய, வளமான, வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடிப்படையாக நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர். "இது கொள்கை, நீதி, உண்மை, கண்ணியம் மற்றும் கடமையின் பாதையில் நடந்து வலிமை பெறும் இந்தியா" என்று தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை தலைவர்  ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

AD/PKV/DL



(Release ID: 1927903) Visitor Counter : 766