சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 26 MAY 2023 12:35PM by PIB Chennai

சிவிங்கிப் புலித் திட்டத்திற்கு வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தக் குழுவை அமைத்துள்ளது. சிவிங்கிப் புலிகள் அறிமுகம், கண்காணிப்பு, திட்டத்தில் முன்னேற்றம் போன்றவை தொடர்பாக இந்தக் குழு மத்திய பிரதேச வனத்துறைக்கும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கும் ஆலோசனைகளை வழங்கும்.

புதுதில்லி உலக புலிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோபால் தலைமையிலான இந்தக் குழுவில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் மேலும் பத்து பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இது தவிர சிவிங்கிப் புலிகள் தொடர்பான ஆலோசனைக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சர்வதேச வல்லுநர்கள் நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். தேவைப்படும் போது இந்த குழுவிடமிருந்து ஆலோசனை பெறப்படும்.

 

******

SM/PLM/MA/KPG


(रिलीज़ आईडी: 1927457) आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Telugu , Malayalam