விவசாயத்துறை அமைச்சகம்

முக்கிய பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்

Posted On: 25 MAY 2023 6:03PM by PIB Chennai

2022-23 விவசாய ஆண்டின் முக்கிய பயிர்களின் உற்பத்தி குறித்த மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், நடப்பு வேளாண் ஆண்டில் 3305.34 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார். விவசாயிகளின் கடின உழைப்பால் வேளாண் துறை நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதாக அவர் கூறினார்.

உணவு தானியங்கள் – 3305.34 லட்சம் டன் (பதிவு)

அரிசி – 1355.42 லட்சம் டன் (பதிவு)

கோதுமை - 1127.43 லட்சம் டன் (பதிவு)

கம்பு - 111.66 லட்சம் டன்

மக்காச்சோளம் – 359.13 லட்சம் டன் (பதிவு)

மொத்த பருப்பு வகைகள் - 275.04 லட்சம் டன்

எண்ணெய் வித்துக்கள் – 409.96 லட்சம் டன்(பதிவு)

பருத்தி – 343.47 லட்சம் பேல்கள் (ஒவ்வொன்றும் 170 கிலோ)

கரும்பு - 4942.28 லட்சம் டன்கள் (பதிவு)

2022-23 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 3305.34 லட்சம் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டான 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 149.18 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.

2022-23-ம் ஆண்டில் அரிசியின் மொத்த உற்பத்தி (பதிவு) 1355.42 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 60.71 லட்சம் டன் அதிகம்.

நாட்டில் கோதுமை (பதிவு) உற்பத்தி 1127.43 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு உற்பத்தியை விட 50.01 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.

 

****** 

SM/CR/KPG



(Release ID: 1927358) Visitor Counter : 157