வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“100 பொலிவுறு நகரங்கள் - புதிய நகர்ப்புற இந்தியாவின் உண்மையான ஊக்குவிப்பு” - திரு ஹர்தீப் எஸ் பூரி

Posted On: 23 MAY 2023 12:46PM by PIB Chennai

பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு  ஹர்தீப் எஸ் பூரி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களைப் பாராட்டினார். நகர அளவில் செயல்படுத்தப்படும் இயக்கத்தின் அமலாக்கம்  சிறப்பு வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 100 பொலிவுறு நகரங்களின் புதுமையான அம்சங்கள் மூலம் இந்தியாவின் எதிர்கால நகர்ப்புறங்கள் குறித்த செயல்பாடுகள் அமையும் என்று அவர் கூறினார்.

சிறந்த உள்கட்டமைப்பு, தூய்மை மற்றும் நீடித்த சுற்றுச்சூழல், தரமான வாழ்க்கை முறை ஆகியவற்றை அளிக்கும் வகையில் பொலிவுறு நகரங்கள் இயக்கம் 2015 ஜூன் 25 அன்று தொடங்கப்பட்டது. 2 கட்ட போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்றுவதற்கான பணிகள் திருப்தியளிக்கிறது.

 

******

AP/IR/KPG/KRS


(Release ID: 1926676) Visitor Counter : 213