அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பொருட்கள் மற்றும் காப்புரிமைகள் உருவாக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கு பொது-தனியார் ஒத்துழைப்பு நிதியளிப்பின் தாக்கத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி

Posted On: 23 MAY 2023 10:54AM by PIB Chennai

பொருட்கள் மற்றும் காப்புரிமைகள் உருவாக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கு பொது - தனியார் ஒத்துழைப்பு நிதியளிப்பின் தாக்கத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கண்காட்சி தில்லி ஐஐடியில் 2023, மே 22 அன்று தொடங்கியது.

“புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப  ஆய்வின் தாக்கம் என பொருள்படும் இம்ப்ரிண்ட் முன்முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து தொழில் துறையுடன் அரசும், கல்வி நிறுவனங்களும்  பணிபுரிவதற்கு தனித்துவ உதாரணமாக விளங்குகிறது. இதன் மூலம் பல தொழில்நுட்பங்களும், பல பொருட்களும் சந்தைகளை அடைந்துள்ளன” என்று இந்தக் கண்காட்சி தொடக்க நிகழ்வில், அறிவியல் மற்றும் பொறியியல் வாரியத்தின் செயலாளரும், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகருமான டாக்டர் அகிலேஷ் குப்தா தெரிவித்தார்.

தொழில் துறையால் ஊக்குவிக்கப்படும் இத்தகையை ஆராய்ச்சி பொது – தனியார் துறை பங்களிப்புடனான பணிகளுக்கு முன்மாதிரிகைளை உருவாக்கும் என்றும், இதனால் இந்திய தொழில்துறையை மேலும் புதுமைக் கண்டுபிடிப்பு உடையதாக மாற்ற முடியும் என்பதோடு, மிகவும் நவீனமான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் ஊக்கப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் இவை, வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக மாற முடியும் என்றும் டாக்டர் குப்தா மேலும் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற பத்துத் துறைகள்:  சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரத் தொழில்நுட்பம், நீடித்தக் குடியிருப்பு, நீராதாரங்கள், நவீனப் பொருட்கள், தகவல் மற்றும் தொடர்புத்தொழில்நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், பாதுகாப்புத் தொழில்நுட்பம்.

தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, கல்வி அமைச்சக இணைச் செயலாளர் திருமதி சௌமியா குப்தா உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

******

AP/SMB/RS/KRS



(Release ID: 1926629) Visitor Counter : 142