உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோடி சமாஜத்தின் தேசிய மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.

Posted On: 21 MAY 2023 7:36PM by PIB Chennai

குஜராத்தின் முதல்வராக இருந்தபோது செய்த மக்கள் நலப் பணிகளின் அடிப்படையில், திரு நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்று, இப்போது பிரதமராக, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தி வருகிறார்.

 

முந்தைய அரசுகள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை எப்போதும் துன்புறுத்தியும் அவமானப்படுத்தியும் புறக்கணித்ததால் அந்த சமூகத்தினருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை எடுத்து கடந்த 9 ஆண்டுகளில் இந்த சமூகத்தின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் திரு நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டுள்ளனர்

 

முன்பு கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை, ஆனால் இப்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஏழைகளின் துன்பத்தில் அக்கறை கொண்ட திரு மோடி, நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளார்

 

ஏழை எளிய மக்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக திரு நரேந்திர மோடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்

 

அரசின் பல மக்கள் நலத் திட்டங்களை நேரடிப் பயன் பரிமாற்ற சேவையுடன் இணைத்து அதன் பலன்களை ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி பிரதமர் மோடி ஊழலை ஒழித்துள்ளார் .

 

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 50 ஆண்டுகால எதிர்க்கட்சி அரசுகளுடன் ஒப்பிடுகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி பல குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, நீங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமானவர், அவருக்கு உங்கள் ஆட்டோகிராப் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறும்போது, ​​ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்.

 

இந்தியாவின் பெருமையை உலகில் நிலைநிறுத்த பாடுபட்ட அத்தகைய பிரதமரை ரத்தோர், டெலி, சாஹு சமூகத்தினர் நாட்டுக்கு வழங்கியுள்ளனர்.

 

உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் இன்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

 

 மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோடி சமாஜத்தின் தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார்.

 

திரு அமித் ஷா தனது உரையில், சிதறடிக்கப்பட்ட சமூகத்தை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது சமூகத்திற்கும் தேசத்திற்கும் நல்ல அறிகுறி என்றும் கூறினார். தொடர் முயற்சியாலும், பலத்தாலும் இந்த சமூகம் முன்னேறி, பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார். இந்த சமுதாயம் சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டது என்று அமித் ஷா கூறினார்.

 

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித்ஷா,  குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று திரு நரேந்திர மோடி இளைஞர்களை ஊக்கப்படுத்தியதாகவும், குஜராத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு இணையற்ற கட்டமைப்பை உருவாக்கி வழங்கியுள்ளார் என்றும் கூறினார். குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு திரு நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி வருகிறார் என்றார்.

 

முந்தைய அரசுகள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை எப்போதும் துன்புறுத்தியும் அவமானப்படுத்தியும் புறக்கணித்ததால் இந்த சமூகத்தினருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை எடுத்து கடந்த 9 ஆண்டுகளில் அந்த சமூகத்தின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. முதல் முறையாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 27 அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் திரு நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

 

முன்பு கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் நீட் தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இல்லை, ஆனால் இப்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று திரு அமித்ஷா தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட வகுப்பின் இளம் தொழில் முனைவோருக்கான மூலதன நிதி அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருத்தம் செய்யும் செயல்முறையும் அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 56 ஆண்டுகால முந்தைய அரசாங்கங்களின் ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மரியாதை அளிக்க ஒரு முயற்சி கூட எடுக்கப்படவில்லை என்று திரு அமித் ஷா கூறினார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் சமூகம் உயர்ந்து அதற்குரிய இடத்தை அடைந்து வருகிறது.

 

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஜனநாயக வழியில் நாட்டின் பிரதமரானதால், ஏழைகளுக்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார் என்று திரு அமித் ஷா கூறினார். முதன்முறையாக, இப்படிப்பட்ட வறுமையைப் புரிந்து கொண்ட  ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார். ஏழைகளின் துன்பத்தைப் புரிந்து கொண்ட திரு மோடி, நாட்டின் சுமார் 13 கோடி மக்களின் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கியுள்ளார்.  10 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தந்துள்ளார். 3 கோடி பேருக்கு வீடுகள், 3 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம், ஐந்து லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு வசதிகள் ரூ. 70 கோடி பேருக்கும் , 80 கோடி பேருக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்களும் இரண்டரை ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டன. கோவிட் -19 பெருந்தொற்றின் போது, ​​அனைவரையும் சமமாகக் கருதி, பிரதமர் திரு நரேந்திர மோடி 130 கோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கினார் என்று திரு ஷா கூறினார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பிரதமர் மோடி காட்டியுள்ளார் என்றும். பிரதமர் திரு நரேந்திர மோடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு வசதிகளை செய்து தருகிறார் என்றும் கூறினார். பிரதமர் மோடி அரசின் பல மக்கள் நலத்திட்டங்களை நேரடிப் பயன் பரிமாற்றம் சேவையுடன் இணைத்து அதன் பலனை ஏழைகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி ஊழலை ஒழித்துள்ளார் என்றார்.

 

ரத்தோர், டெலி, சாஹு சமூகத்தினர் நாட்டுக்கு மகத்தான பங்களிப்பை அளித்து உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட பாடுபட்ட அத்தகைய பிரதமரை நாட்டுக்கு வழங்கியுள்ளனர். அமெரிக்க அதிபர் கூறுகையில், "பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி, நீங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கிறீர்கள், எனக்கு உங்கள் ஆட்டோகிராப் வேண்டும்" என்றார். அப்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறான். உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், இன்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் உற்பத்தியில் உலகில் இரண்டாவது, விமானச் சந்தையில் மூன்றாவது, ஆட்டோமொபைல் சந்தையில் மூன்றாவது, ஸ்டார்ட்-அப்களில் மூன்றாவது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 50 ஆண்டுகால அரசுகளுடன் ஒப்பிடுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சி பல குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித்ஷா கூறினார்.

***

AD/CJL/DL


(Release ID: 1926173) Visitor Counter : 241