ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஆசிய பெட்ரோ- ரசாயன தொழிற்சாலை மாநாடு 2023க்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 19 MAY 2023 2:55PM by PIB Chennai

நட்பு ரீதியிலான தொழில் கொள்கைகளால், முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா மாறியிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். புதுதில்லியில்   ஆசிய பெட்ரோ- ரசாயன தொழிற்சாலை மாநாடு 2023க்கு இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார். நீடித்த எதிர்காலத்தைத் தூண்டுதல் என்பதைக் கருப்பொருளாகக் கொண்ட இந்த மாநாட்டில்,  சீனா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1200 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் ரசாயன உற்பத்தி தொழிற்சாலைகள், பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியின் உலகளாவிய கேந்திரமாக இந்தியாவை  மாற்றியிருப்பதாக குறிப்பிட்டார். பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் என்பது நம்முடைய அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருப்பதாகக் கூறிய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,  இந்தத் துறையில் எளிமையாக தொழில் செய்ய ஏதுவாக வரிக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கை மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாக சுட்டிக்காட்டினார். பெட்ரோ-கெமிக்கல்ஸ் மற்றும் ரசாயான விநியோகச் சங்கிலியில், உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்ற நட்பு நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், இது முதலீடு செய்வதற்கு தகுந்த நேரமாகும் என வலியுறுத்திய மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பல நாடுகளுடன் தடையில்லா வர்த்தகம் செய்தற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதையும் நினைவுகூர்ந்தார். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ளும் திறமை இந்தியர்களுக்கு உண்டு என்பதால், புதிய திறன் வாய்ந்த தொழில்முனைவோர் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார். பெட்ரோ ரசாயனத் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த கொள்கைகளை வடிவமைப்பதில் மத்திய அரசு  தீவிரம் காட்டிவருவதாக கூறிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இதற்காக பெட்ரோ கெமிக்கல் துறைக்கும், ஊக்கத்தொகையுடன் கூடிய உற்பத்தித் திட்டத்தை அமல்படுத்த கொள்கைகளில் மாற்றம் செய்திருப்பதாகவும் கூறினார்.

அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் நீடித்த வளர்ச்சியை முன்னிறுத்தி, நடப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதுடன், முனைப்பான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை குறைக்க ஏதுவாக தேசிய ஒருங்கிணைந்தத் திட்டம் என்ற விரைவுச்சக்தித் திட்டத்தை மத்திய அரபு செயல்படுத்தி இருப்பதாகக்  கூறிய  டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தத்திட்டத்திற்கு பெட்ரோ கெமிக்கல்ஸ் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

••••

AD/ES/RS/KRS



(Release ID: 1925530) Visitor Counter : 129