உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விங்ஸ் இந்தியா 2024-க்கான முன்னோட்ட நிகழ்வுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
19 MAY 2023 3:14PM by PIB Chennai
விங்ஸ் இந்தியா 2024-க்கான முன்னோட்ட நிகழ்வுக்கு இந்திய தொழில் வர்த்தக சபைகளின் சம்மேளனம்- ஃபிக்கியுடன் இணைந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் 18.05.2023 அன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா முன்னோட்ட வீடியோவையும், விங்ஸ் இந்தியா 2024- தகவல் கையேட்டையும் வெளியிட்டார்.
முறைப்படுத்துபவர் என்பதில் இருந்து வசதி அளிப்பவர் என்ற பங்கிற்கு மாறி வருவதன் மூலம் நாட்டின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தைக்கான திறன் உருவாக்கத்தின் மீது அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 148- ஆக அதிகரித்துள்ளது என்றும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், நீர் மீதான ஓடுபாதைகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த முன்னோட்ட நிகழ்வில் விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் திரு ராஜீவ் பன்சால், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தலைவர் திரு சஞ்சீவ் குமார், ஏர் பஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு ரெம்மி மெய்லார்ட், ஃபிக்கி தலைமைச் செயலாளர் சைலேஷ் பதக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விங்ஸ் இந்தியா 2024 நிகழ்வு ஐதராபாத்தில் 2024 ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து விமான தொழில்துறையினர் பங்கேற்கவுள்ளனர்.
******
AD/SMB/AG/KRS
(Release ID: 1925522)
Visitor Counter : 217