மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒப்பந்த அடிப்படையில் இணைச் செயலாளர் நிலை / இயக்குநர் / துணைச் செயலாளர் நிலை பணிக்கான நேரடிச் சேர்க்கை

Posted On: 18 MAY 2023 2:46PM by PIB Chennai

மத்திய அரசின் பணியாளர் தேர்வு மற்றும் பயிற்சி துறையிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், கீழ்கண்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒப்பந்தப் அடிப்படையில் இணைச் செயலாளர் நிலை / இயக்குநர் / துணைச் செயலாளர் நிலை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் துறை
  2. விமானப் போக்குவரத்து அமைச்சகம்
  3. இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் மற்றும் துறை
  4. பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம்
  5. உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் துறை
  6. கனரக தொழில்துறை அமைச்சகம்
  7. உயர் கல்வித்துறை, கல்வி அமைச்சகம்
  8. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்
  9. சட்ட விவகாரத்துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
  10. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்த மேம்பாட்டுத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
  11. மருந்து உற்பத்தித் துறை, இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
  12. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம்

இந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நான்கு இணைச் செயலாளர்கள் மற்றும் 16 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் நேரடியாக பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.

இது குறித்த விரிவான விளம்பரம் மற்றும் தகவல்கள் மத்திய பணியாளர் தேர்வாணைய இணையத்தளத்தில் 2023, மே 20 அன்று பதிவேற்றம் செய்யப்படும். ஆர்வமுள்ளவர்கள் 2023, மே 20 ஆம் தேதி முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

******

AD/IR/MA/KRS



(Release ID: 1925271) Visitor Counter : 186