ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து ஒருங்கிணைந்த சுகாதாரக் கொள்கையை வகுக்கவுள்ளன- டாக்டர் மன்சுக் மாண்டவியா
प्रविष्टि तिथि:
18 MAY 2023 4:01PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கிவைத்தார். ஒருங்கிணைந்த சுகாதாரம் என்னும் இலக்குடன் மத்திய ஆயுஷ் அமைச்சகமும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் இணைந்து முன்னுரிமை அடிப்படையில், இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் இரண்டு தகவல் தொடர்பு தொழில்நுட்ப முன்முயற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலாண்மை முறை மின்னணு கற்றல் முன்முயற்சி திரு சர்பானந்த சோனாவால் அவர்களாலும், மேம்படுத்தப்பட்ட மின்னணு சுகாதார பதிவு முறையான ஒருங்கிணைந்த ஆயுஷ் சுகாதார மேலாண்மை தகவல் முறை டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்களாலும் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆயுஷ் இணையமைச்சர் டாக்டர் முஞ்சிபாரா மகேந்திரபாய், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், உத்தராகண்ட், அசாம், மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திரு சோனாவால், சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்காக ஆயுஷ் அமைச்சகமும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் இணைந்து பணியாற்றுவதை பிரதமர் திரு நரேந்திர மோடி ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார். இந்தத் துறையில் இந்தியா உலகிற்கே தலைமை வகிக்க வேண்டும். இரண்டு அமைச்சகங்களும் இடையிறாது பணியாற்றுவதால், நமது உறுதிப்பாடும், வலிமையும் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இரு அமைச்சகங்களும் சேர்ந்து விரைவில் ஒருங்கிணைந்த சுகாதாரக் கொள்கையை வகுக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவின் பாரம்பரியமான மருத்துவ முறை நமது வலிமை என்று கூறிய அவர், இதனை உலகம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். நலவாழ்வுக்கு யோகாவே சிறந்தது என்று கூறிய அவர், ஜப்பானில் பெரும்பாலானவர்கள் யோகா பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதாகத் தெரிவித்தார்.
******
AD/PKV/RS/KRS
(रिलीज़ आईडी: 1925258)
आगंतुक पटल : 252