மத்திய அமைச்சரவை

இந்தியாவின் போட்டி ஆணையத்திற்கும் எகிப்திய போட்டி ஆணையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 17 MAY 2023 4:04PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்திய போட்டி ஆணையம் (இசிஏ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவு ஒப்புதல் அளித்தது.

செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்குகள்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்தியப் போட்டி ஆணையத்திற்கு (இசிஏ) இடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், அனுபவப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அனுபவங்களைக் கற்றுக்கொள்வதையும், பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தாக்கம்:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் எகிப்து போட்டி ஆணையத்திடமிருந்து கற்றுக்கொள்ள உதவுகிறது. இது நுகர்வோருக்கு பெருமளவில் பயனளிக்கும்.

பின்னணி:

போட்டிச் சட்டம் 2002, பிரிவு 18 ஆனது, இந்தியப் போட்டி ஆணையம் தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, எந்தவொரு வெளிநாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதன்படி, இந்தியா – எகிப்து இடையே மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

******

AP/CR/KRS



(Release ID: 1924845) Visitor Counter : 165