அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிட ஒரு வழிமுறை விரைவில் உருவாக்கப்படும்- டாக்டர். ஜிதேந்திர சிங்

Posted On: 14 MAY 2023 4:02PM by PIB Chennai

நாட்டில்  ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேல் அதிகரித்து வருவதால், அவற்றின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிட ஒரு பொறிமுறையை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்  டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இன்று புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப வார கண்காட்சியின் விருது வழங்கும் விழாவில் அவர் உரையாற்றினார். "இந்த ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சியை நெருக்கமாகப் பின்தொடரும், குறிப்பாக அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவைப் பெற்ற ஸ்டார்ட்-அப்கள் நஷ்டமடையாமல் இருக்க, அவற்றை எவ்வாறு தக்கவைப்பது என்பதைப் பார்க்க, இது போன்ற ஒரு பொறிமுறையை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

 சுதந்திரம் பெற்ற பிறகு மூன்றாம் தலைமுறையாக, கடல்சார்பியலில் புதிய வாய்ப்புகளுக்கு வழி ஏற்பட்டுள்ளதால், தகவல் தொழில்நுட்பத்தில் இருந்து உயிரி தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியலுக்கு மாறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், நாடு தற்போது உள்ளதால், இந்த 3 வது தலைமுறையினர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று அமைச்சர் கூறினார். ஸ்டார்ட்-அப்களுக்கும் வயதுக்கும் தொடர்பில்லை என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெற்ற பிறகு ஒரு விஞ்ஞானி ஒரு ஸ்டார்ட்-அப் அமைப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.

கருப்பொருள் அடிப்படையிலான திட்டங்களான தொகுப்பு  திட்டங்களையும் அமைச்சர் முன்மொழிந்தார். 12க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒன்றிணைந்து பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்துவதற்கு பிரதமர் மோடி வகுத்துள்ள "முழு அரசு" அணுகுமுறைக்கு தேசிய தொழில்நுட்ப வாரக் கண்காட்சி ஒரு எடுத்துக்காட்டு என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

விழாவில் டாக்டர் ஜிதேந்திர சிங் தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு பட்டியலுடன் கடுமையான இரண்டு அடுக்கு மதிப்பீட்டு செயல்முறைக்குப் பிறகு மொத்தம் 11 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

தேசிய தொழில்நுட்ப வார விழாவை கடந்த 11 ம் தேதி அன்று பிரகதி மைதானத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் 12 அமைச்சகங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள்/ கண்காட்சியாளர்கள் பரந்த அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளை இதில் காட்சிப்படுத்தினர்.

***

AD/PKV/DL


(Release ID: 1924047) Visitor Counter : 175