தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மே 16 முதல் 27வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இந்தியக் குழுவிற்குத் தலைமைதாங்குகிறார்
Posted On:
14 MAY 2023 1:31PM by PIB Chennai
இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (மே 16 முதல் 27வரை)மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இந்தியக் குழுவிற்குத் தலைமைதாங்குகிறார். கேன்ஸ் விழா தொடக்க நாளில் சிவப்புக் கம்பளத்தில் தமிழ்ப் பாரம்பரிய உடையான 'வேட்டி' உடுத்தி, நமது செழுமையான இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் டாக்டர் முருகனுடன், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் புகழ் திரைப்பட தயாரிப்பாளர் திருமதி குனீத் மோங்கா, இந்திய நடிகை, மாடல் மற்றும் மிஸ் வேர்ல்ட் 2017 வெற்றியாளரான திருமதி மனுஷி சில்லர், இந்திய சினிமாவின் பாராட்டப்பட்ட நடிகை திருமதி ஈஷா குப்தா, பாராட்டப்பட்ட மணிப்புரி நடிகர் கங்காபம் டோம்பா ஆகியோர் செல்லவிருக்கின்றனர். கங்காபம் டோம்பாவின் மீட்டெடுக்கப்பட்ட திரைப்படமான 'இஷானவ்' இந்த ஆண்டு கேன்ஸ் கிளாசிக் பிரிவில் திரையிடப்படுகிறது.
இந்திய அரங்கு, அகமதாபாதில் உள்ள தேசிய வடிவமைப்புக் கல்வி நிறுவனத்தால் 'இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தை உலக சமூகத்திற்குக் காண்பித்தல்' என்ற மையப்பொருளுடன் கருத்தாக்கம் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்தல் வடிவமைப்பு சரஸ்வதி யந்திரத்தால் ஈர்க்கப்பட்டு, அறிவு, இசை, கலை, பேச்சு, ஞானம், கற்றல் ஆகியவற்றின்
காவலாளியான சரஸ்வதி தேவியின் சுருக்கமான பிரதிநிதித்துவமாக இந்த அரங்கு அமைந்துள்ளது. அரங்கின் வண்ணங்கள் இந்திய தேசியக் கொடியின் துடிப்பான வண்ணங்களில் இருந்து உத்வேகம் பெறுகின்றன - காவி, வெண்மை, பச்சை மற்றும் நீலம். நாட்டின் வலிமை மற்றும் தைரியத்திற்கு காவி , உள் அமைதி மற்றும் உண்மைக்கு வெள்ளை, நிலத்தின் வளம், வளர்ச்சி மற்றும் மங்களத்தை வெளிப்படுத்தும் பச்சை, தர்மம் மற்றும் சத்தியத்தின் விதிகளுக்கு நீலம். திறமைகளின் மிகப்பெரிய களஞ்சியத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்திய திரைப்பட சமூகத்திற்கு விநியோக ஒப்பந்தங்கள், தயார்நிலை ஸ்கிரிப்டுகள், தயாரிப்பு ஒத்துழைப்புகள் மற்றும் உலகின் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் மீடியா செயற்பாட்டாளர்களுடன் எளிதாக கையெழுத்திடுவதற்கான தளத்தை இந்திய அரங்கு வழங்கும்.
76வது கேன்ஸ் திரைப்பட விழாவில், உள்ளடக்க உருவாக்கத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியாவைக் காட்டுவதற்காக, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் காணொலிக் காட்சி மூலம் தொடக்க அமர்வில் உரையாற்றுகிறார்.
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நான்கு இந்திய படங்கள் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளன. கானு பெஹலின் ஆக்ரா, டைரக்டர்ஸ் ஃபார்ட்நைட்டில் திரையிடப்படும். இது கேன்ஸ் உலகப் பிரீமியரில் திரையிடப்படும் அவரது இரண்டாவது படமாகும். 2014 ஆம் ஆண்டு, அவரது முதல் திரைப்படமான டிட்லி, 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவில் திரையிடப்பட்டது. அனுராக் காஷ்யப்பின் கென்னடி திரைப்படம் மிட்நைட் திரையிடலிலும், நெஹெமிச், ஃபெஸ்டிவல் டி கேன்ஸின் லா சினிஃப் பிரிவிலும் திரையிடப்படுகின்றன. இவை தவிர, மார்ச்சே டு பிலிம்ஸில் பல இந்தியப் படங்கள் திரையிடப்பட உள்ளன. மீட்டெடுக்கப்பட்ட மணிப்புரி திரைப்படமான ‘இஷானவ்’, ‘கிளாசிக்ஸ்’ பிரிவில் காட்சிப்படுத்தப்படும். இந்தத் திரைப்படம் 1991 ஆம் ஆண்டு திரைப்பட விழாவில் 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவில் திரையிடப்பப்பட்டது. இதன் திரைப்படச் சுருள்கள் இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகத்தால் பாதுகாக்கப்பட்டன. ஃபிலிம் ஹெரிடேஜ் அறக்கட்டளை மற்றும் பிரசாத் ஃபிலிம் லேப்ஸ் மூலம் மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கம் இப்படத்தை மீட்டெடுத்தது.
இந்திய அரங்கில் விழாக்காலம் முழுவதும் தொடர்ச்சியான கலந்துரையாடல் அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட முக்கிய அமர்வுகள்-
• அவள் பிரகாசிக்கிறாள்: சினிமாவில் பெண்களின் பங்களிப்பு, வேலைவாய்ப்பைக் காட்டிலும், திரைப்படத் தயாரிப்பில் பெண்களின் இருப்பை முன்னிலைப்படுத்துகிறது. இது பெரிய கலாச்சார பிரச்சினைக்குப் பங்களிப்பு செய்கிறது
• இந்திய சர்வதேச திரைப்பட விழா 2020ல் இளம் திரைப்படத் திறமையாளர்களை வளர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட ‘75 நாளைய படைப்பாக்க மனங்கள்’ என்ற வடிவிலான அமர்வு, அதன் வெற்றிக் கதையை வெளிப்படுத்துவதோடு, அதற்கான கூடுதல் ஒத்துழைப்பைப் பெறுவதற்கும் உதவும்.
இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் எப்போதுமே கேன்ஸ் சிறப்பு வாய்ந்ததாகவும் கலாச்சார பரிமாற்றத்திற்கான பிறநாட்டு இடமாகவும் இருக்கும். கடந்த ஆண்டு, மார்ச்சு டு கேன்ஸில் இந்தியா 'கௌரவ நாடு' என இருந்தது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளில் இந்தியத் திரைப்படங்களின் வெற்றியுடன்,உலகையே ஆட்டம்போட வைத்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல், சிறந்த ஆவணப்பட குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆகியவை நமது இந்தியக் கதைகளின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.
***
AD/SMB/DL
(Release ID: 1924045)
Visitor Counter : 525