பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாஷ்கண்டில் நடைபெற்ற ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2023 6:18PM by PIB Chennai

தாஷ்கண்டில் நடந்த ஆடவர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற தீபக் போரியா, ஹுசாமுதீன், நிஷாந்த் தேவ் ஆகியோருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்த பிரதமர் கூறியிருப்பதாவது:

“தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அவர்களின் சாதனைகள் மிகவும் உத்வேகம் அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

----

SRI/CR/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1923502) வருகையாளர் எண்ணிக்கை : 196