வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஸ்டார்ட்-அப் மன்றம் 2023

Posted On: 11 MAY 2023 4:29PM by PIB Chennai

ஸ்டார்ட்-அப் குறித்து மெய்நிகர் பயன்முறையில் ஏற்கனவே இரண்டு வெற்றிகரமான நிகழ்வுகளை நடத்திய பிறகு, ஸ்டார்ட்-அப் இந்தியாவும், மத்திய வர்த்தக அமைச்சகமும் மூன்றாவது நிகழ்வை புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஸ்டார்ட்-அப் மன்றம் மூலம் முதன்முதலில் நேரடியாக ஏற்பாடு செய்தது. அரசு அதிகாரிகள், தனியார் தொழில்துறையினர், ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகள் என ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு.சோம் பிரகாஷ், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஸ்டார்ட்-அப்களின் பங்கை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், 'ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் பங்கு' என்ற தலைப்பில் ஸ்டார்ட்-அப் இந்தியா நடத்திய பயிலரங்கில் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாடுகளுக்கிடையில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பது குறித்தும், எஸ்சிஓ நாடுகளில் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், எஸ்சிஓ உறுப்பு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் டெல்லி ஐஐடி-யில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அறக்கட்டளையைப் பார்வையிட்டனர். இதன் மூலம், இந்திய ஸ்டார்ட்-அப் அமைப்பு குறித்த சூழலமைப்பை தகவலகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, இந்தியாவின் தொழில்முனைவோர் குறித்து அறிந்து கொண்டதோடு, இந்தியாவில் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் தெரிந்து கொண்டனர்.

முன்னதாக,  எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்காக ஸ்டார்ட்-அப் இந்தியா பல்வேறு முயற்சிகளை ஏற்பாடு செய்திருந்தது:

1. எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஃபோரம் 2020: எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே ஸ்டார்ட்-அப்களுக்கான பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கான அடித்தளத்தை எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஃபோரம் அமைத்தது.

2. எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஃபோரம் 2021: காணொலி மூலம் நடைபெற்ற இரண்டு நாள் கருத்துக்களம், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேக தளத்தில் நடைபெற்றது. எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஹப் இந்த மன்றத்தில் தொடங்கப்பட்டது.

3. வழிகாட்டல் திட்டம் : எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் நிறுவனர்களின் திறனை வளர்ப்பதற்காக, பரிந்துரைக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்களுக்காக 3 மாத நீண்ட மெய்நிகர் வழிகாட்டு நிகழ்ச்சியான ‘ஸ்டார்டிங்-அப்’ ஏற்பாடு செய்யப்பட்டது.

***

AD/CR/KPG



(Release ID: 1923429) Visitor Counter : 135